பக்கம்:பேசாத பேச்சு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மர் இருக்கிற சாமியார் 3·

விட்டால் அந்தச் சத்தம் ஊாறியப் பாவும். அவனுக்கு அது பேச்சு ; மற்றவர்களுக்கு அது கூச்சல். அப்படித்" தான் நானும் வருணிக்கத் தொடங்குகிறேன் ” என்று பொருள் படும்படி அவர் அவையடக்கம் சொல்கிரு.ர்.

வாங்கரும் பாதம் நான்கும்

வகுத்தவான் மீகி என்பான் திங்கவி செவிகள் ஆரத்

தேவரும் பருகச் செய்தான்; ஆங்கவன் புகழ்ந்த நாட்டை

அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசல் உற்ருன்

என்னயான் மொழியல் உற்றேன். - ஊமைக்குக் கூடப் பேச வேண்டும் என்ற ஆசையும். முயற்சியும் இருக்கின்றன. வாயுள்ளவர்கள் பேசாமல் அரை நாழிகை சும்மா இருப்பார்களா ? அது முடியவே முடியாது. -

ஒரு கோவிலில் புதிய தர்மகர்த்தா ஒருவர் வந்து சேர்ந்தார். பழம் பெருச்சாளிக ளேப் போக்கி விட்டு ஆற்றலுள்ள புதிய ஊழியர்களே நியமிக்கவேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு அவர் வேலையை ஒப்புக்கொண்டார். பழைய கணக்குகளே வருவித்துப் பார்த்தார். கோவிலில் நிவேதனமாகும் பிரசாதங்களே எப்படி எப்படி விநியோகம் செய்கிருர்களென்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். கண்ணே ஒட்டி வருகையில், ஒரு வரியிலே அவர் பார்வை கின்றுவிட்டது. : இதென்ன அக்கிரமம்? என்று அவர் வாய் முனு முணுத்தது. " சும்மா இருக்கிற சாமியாருக்கு இரு பட்டை” என்று அங்கே இருந்தது. வேலை செய்கிறவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/12&oldid=610167" இலிருந்து மீள்விக்கப்பட்டது