பக்கம்:பேசாத பேச்சு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்க்கர் கோபம் 97

தது, கோபம் அரக்கர்கோன்பால் எப்படிக் கோலம், கொண்டது என்பதை விரிவாகக் காட்டுகிரு.ர்.

தன் தங்கையின் அலங்கோலத்தைப்பற்றி அவன் விசாரிக்கக்கூட இல்லை; அதற்கு முன்பே அவன் கோபம் விரைந்து முன்வந்து கின்றது. அது வருவதற்கு முன் உலக முழுவதும் இயற்கை திறம்பியது. .

மூவுலகமும் இருட்படலம் மூடியது. ஆதிசேடன் அஞ்சித் தன் ஆயிரங் தலைகளையும் நெளித்தான். திசைக் கிரிகள் யாவும் அசைந்தன. சூரியன் இனி என்ன வருமோ என்று நடுங்கினன். திசை யானைகள் ஒடின. தேவர்களெல்லாம் யார் கண்ணிலும் படாமல் ஒளித்துக் கொண்டார்கள். -

தாடகையின் கோபம் கடலையும் நிலத்தையும் அலைத்தது. அாக்கர் கோனகிய ராவணன்பால் அவளைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு சாட்சசத் தன்மை அல்லவா இருக்கிறது? எனவே அதற்கு ஏற்றபடி முன் அடையாளங்கள் தோற்ற வேண்டுமே. அதனுல்தான் இங்கே மூவுலகமும், பாதாளத்திலே கிடக்கும் ஆதிசேட னும், திசைக் கிரிகளும் கரிகளும், தேவரும் இயற்கை நியதி கலைந்து குழம்பி உழல்கிருர்கள்.

மூடினது இருட்படக் மூவுலகும் முற்றச் சேடனும் வெருக்கொடு சிரக்குவை நெளித்தான். ஆடின குலக்கிரி, அருக்கனும் அயிர்த்தான் ஓடின. திசைக்கரிகள் உம்பரும் ஒளித்தார். (படலே - பரப்பு. வெரு பயம் அருக்கன்-குரியன்.) கோப உணர்ச்சியால் ராட்சசச் சக்காவர்த்தியின் பால் உண்டான சத்துவங்களேக் கம்பர் வருணிக்கின்ருர்,

பே. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/106&oldid=610261" இலிருந்து மீள்விக்கப்பட்டது