பக்கம்:பேசாத பேச்சு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i06 பேசாத பேச்சு

ஒன்று அடித்தன ; பூமி பிளக்கவும், இடிகூட அந்த ஒலி கேட்டு அஞ்சவும் அடித்தன.

பரதன் சினம் வந்தால் அடக்கிக் கொள்ளும் சாத்து விக இயல்பு நிறைந்தவன். அவனுக்குக் கோபம் வாாது. வந்தால் உள்ளத்திலேயே நின்றுவிடும். உடம் பிலே தோற்ருது. இப்போது கோபம் வந்துவிட்டது. அவன் தன் உணர்வை இழந்தான். ராமனேயன்றி வேறு உயர்ந்த பொருளோ, வாழ்வுக்குப் பயனே இல்லாதவன் பதன். உயிர் நீங்கிய உடம்பு போல ஆகிவிட்டான் அப்போது. ஆகவே சினம் அவனையும் மிஞ்சிக் தன் காரியத்தைப் பார்க்கத் தொடங்கியது. அவன் அறிவுக் குப் புறம்பே அதன் கோலம் வெளியாயிற்று. அதல்ை தான் கம்பர் இந்தக் காரியங்களைப் பாகன் செயலாகச் சொல்லவில்லை. அந்த அந்த அவயவங்களின் செயலாகவே, சொல்லிவிட்டார். - -

துடித்தன. கபோலங்கள்; சுற்றும் தீச்சுடர் பெரடித்தன மயிர்த்தொளே, புகையும் போர்த்தது; மடித்தது வாய்; நெடு மழைக்கை மண்பக அடித்தன ஒன்ருெடொன்று அசணி அஞ்சவே. (பொடித்தன . தோன்றின. அசனி. இடி

பெருஞ் சினமாகிய வேகம் உந்தக் கால்களே நிலத் திலே இங்கி வைத்தபோது, அவன் காலுக்கு அத்தனே பலம் இல்லர்விட்டாலும் அந்தக் கோபத்துக்கு அளவற்ற ஆற்றல் இருந்தது. அந்த ஆற்றல் அளவெடுத்துக் காட்ட முடியாது. கவிஞன் காட்டுகிருன். பாகங்களை மாறி வைக் கும்போது பூமியும் மேருவும் சுழன்றன. பெருங்கட்லில் யானையை ஏற்றி வரும் பெருங் கப்பல் பெரும் புயற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/115&oldid=610270" இலிருந்து மீள்விக்கப்பட்டது