பக்கம்:பேசாத பேச்சு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் கோபம் 107

காற்ருல் அலைப்புண்டு சுழல்வது போலச் சுழன்றன. வாத கோபத்துக்கு அத்தனை ஆற்றல் இருக்கத்தானே வேண்டும் ?

வானவர் அஞ்சினர். அாக்கர் அச்சத்தால் செத்தே போனர்கள். திக்கு யானைகள் பயந்து போயின; அதனுல் இடையருமல் ஊற்றுப்போல அவற்றிடமிருந்து சுரந்து கொண்டிருந்த மதநீர்த் தாரைகள் அடைத்துப் போயின. யமன் தன் கண்ணேப் புதைத்துக் கொண்டான்.

இந்தத் தம்பியின் கோபம் இப்படியெல்லாம் சிலை யோடியது. தவ முனிவன் கோபமும், அாக்கன் கோபமும் இப்படித்தான் எதிரொலி செய்தன. ஆனல் அவற்றின் விளேவு வேறு; இதன் விளைவு வேறு. . . -

பாதன் கோபம் யாருக்கும் தீமையை விளக்கவில்லை. கைகேயியிடம் சில சொற்களாக விளங்தது. அப்பால் அது ஆறிவிட்டது. அதன் இடத்தைச் சோகம் மேற் கொண்டது. . -

பரதன் தன் தாயிடம் கோபமாகப் பேசிய பிறகு, :இனி இந்தப் பாவியிடம் இாேன்' என்று கூறிக் கோசலை யிடம் போகிருன் அப்பொழுதே அக் குணக் குன்றின் கோபம் ஓடிவிடுகிறது. கோசலை அருகில் சென்றவுடன் பூமியில் விழுகிறன். தன் கைகளால் அவள் பாதங்களைப் பற்றிக் கிடக்கிருன்; புலம்புகிருன். அந்தப் புலம்பலைப் பல பாடல்களால் கம்பன் சொல்கிருன். - .

இத. இரு விசித்திரமான கோபம். ஆலுைம் - அது ஒரு விதமாக விளைகிறது. பரதன் கைகேயி சொன்னதை

ஏற்றுக்கொள்ளாமல் ராமனிடம் போய்ப் பாதுகையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/116&oldid=610271" இலிருந்து மீள்விக்கப்பட்டது