பக்கம்:பேசாத பேச்சு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - பேசாத பேச்சு

கொணர்கிருன். அவன் கோபம் நன்மையாகவே விள கிறது.

இவ்வாறு பலரிடம் கோபமானது கொள்ளும் கோலத்தைக் கம்பனது காவியத்திலே பார்க்கிருேம். காமன், சீதை, அநுமன் ஆகியோர் கொள்ளும் கோபத் தைக் கோபமென்றே சொல்லக்கூடாது. சிறு காற்.அ வருவதுபோல வந்து போகின்றது. அறிவிற் சிறந்த அறமன் கோபம் கைபிசையும் அளவிலே நிற்கிறது. காலத்தைப் பார்த்துக்கொண்டு கரையைக் கடக்காமல் கிற்கும் கடலைப்போல அவன் இருக்கிருன். சீதையின் கோபம் வெறும் பேச்சாக விளகிறது. அந்தப் பேச்சும் முரட்டுக் கோபமாக இன்றிச் சோகமும் வீரமும் கலந்து தோற்றுகின்றது. ராமன் கோபம் அவன்பால் ஒரு பாவத்தையும் உண்டாக்கவில்லை. வருணனிடம் காட்டுவது கோபமே அல்ல. பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் குற்றம் செய்த குழந்தையைக் கோபத்தினுலா தண்டிக்கிருர்? அல்ல. இன்ன கப்புச் செய்ததஞல், இன்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று ஆராய்ந்து தண்டனை வழங்கு கிருர், அதுபோலத்தான் இருக்கிறது. ராமன் செயல்.

'வருணன் நாம் வழி வேண்டவும் உண்டு இல்லை என்று கூடச் சொல்லவில்லை என்ற நினைவில் நீரிலே தீத் தோன்றிற்ை போலக் கோபம் வந்ததாம். கண்கள் சிவந்தனவாம். புருவம் வளைந்தன. பிறகு வருணன் செய்த பிழையையும் தான் செய்ய வேண்டியதையும் யோசித்துத் தன் கை வில்லை எடுத்து அம்பு எய்கிருன், இது கோபமா? கோபத்தை ஆட்கொண்டவன் அவன் கோபம் அவனைத் தன் வசப்படுத்தவில்லை. இது உன்னதமான மன. இயல்புடையார் நிலை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/117&oldid=610272" இலிருந்து மீள்விக்கப்பட்டது