பக்கம்:பேசாத பேச்சு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரின் பொருள் 11葛

அம்பிகையின் திருவுள்ளத்துக்கு உ வ ப் பா ன பொருள் எது என்று ஆராய வந்தவரைப் போல ஆரம்பிக் கிருர் புலவர். தொடங்கும்போதே அவர் ஆச்சரியத்தில் மூழ்குகிருர். 'என்ன ஆச்சரியம்!” என்று சொல்லிக் கொண்டே ஆரம்பம் செய்கிருர். சகலலோக மாதாவாகிய அம்பிகை திருவுள்ளம் வைத்தால் அவள் திருமேனிப் பெருமைக்கும் சிறப்புக்கும் ஏற்ற திருமஞ்சன சோ இல்லை? வானுலகிலிருந்தும், பூவுலகிலிருந்தும்-பதின்ைகு லோகங்களிலிருந்தும் தீர்த்தம் வருமே. உலகம் முழுவ தும் பாவிக் கிடக்கின்ற நதிகளெல்லாம் அவளுக்குச் சொந்தம். பாலாகவும் நெய்யாகவும் தயிராகவும் பொங்கி அலைமோதுகின்ற சப்த சாகாங்களும் அவள் விரும்பினுல் திருமேனிக்குத் திருமஞ்சனமாகும். இப்படி இருக்க, இவ்வளவிலும் அவள் உள்ளம் செல்லவில்லையாம். அதை நினைக்கையிலே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அன் பாளர் கண்ணிலிருந்து அரும்பும் நீரிலே கிருமஞ்சனம் ஆடுவது அப் பிராட்டிக்கு உவந்த செயலாம். புலவர் சுருக்க்டிாகச் சொன்னலும் கிாம்ப விஷயத்தை வைத்துப் பாடியிருக்கினர். -

என்பாவும் ஆறுகடல் எழுஇருந்தும் என்அம்மை அன்பாளர் கண் அருவி ஆடுவது திருவுள்ளம் (பாவும் - பரவிய) இதைக் காட்டிலும் அதிகமாக அந்தக் கண்ணிசைக் சிறப்பிக்க முடியுமா?. - - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/124&oldid=610279" இலிருந்து மீள்விக்கப்பட்டது