பக்கம்:பேசாத பேச்சு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - பேசாத பேச்சு

பக்தியின் வெளிப்பாட்டில் முக்கியமானது விழி நீர் அரும்புவது. உண்மையான அன்புக்குக் கண்ணிர் அடையாளம் என்று திருவள்ளுவர் சொல்கிரு.ர்.

- அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணிர் பூசல் தரும். - - (அன்புக்கும் அடைக்கின்ற தடைஉண்டா? எத்தனை அடக்கினலும் அன்புடையவர்களின் சிறு கண்ணிர்த் துளி கள் அன்பை வெளிப்படுத்திவிடும்.)

பக்தியினுல் விளையும் இந்தக் கண்ணிர் ஆனந்தத்தின் குறிப்பு என்பதைத் தாயுமானவர் சொல்லுகிரு.ர். போா னந்தம் உற்றவர்களுக்கே கண்ணிரும் கம்பலையும் உண் டாகுமாம்.

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை பெருப்பேதை அறிவாளோ? பேரா னந்தம் உற்றவர்க்கே கண்ணிர்கம் பல உண்டாகும்.

இந்தக் கண்ணிரின் ரகசியத்தை உணர்ந்த பக்தர்களும் ஞானியரும் இதை மிகவும் சிலாக்கியமாகப் பாராட்டி யிருக்கிருர்கள். அன்புக்கு அடையாளமாகிய இந்தக் கண்ணிர் கடவுளுக்கு மிகவும் உவப்பானதென்று சிறப்பிக் கிரு.ர்கள். - எல்லா உலகங்களுக்கும் தனி நாயகியான பரமேசு வரிக்கு அன்பர்களிடத்தில் மாருத கருணே உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அன்பர்களின் அன்பையும் அவர்கள் அன்பிலே அம்பிகைக்கு உள்ள ஈடுபாட்டையும் ஒரு புலவர் விளக்க வருகிறர். அன்பிலே கனிந்து நிற்ப வரை அறிவதற்கு இன்னது அடையாளம் என்பது நமக் o

குத் தெரியுமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/123&oldid=610278" இலிருந்து மீள்விக்கப்பட்டது