பக்கம்:பேசாத பேச்சு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரின் பொருள் 113

பக்தி என்பது கண்ணுலே காதாலே உணா முடிவ தல்ல என்பதைத் தெரிந்துகொண்ட புலவன், அதை மெய்ப்பாடுகளால் புலப்படுத்துகிருன். அவன் சொல் லாலே சித்திரம் வளைந்து நம் உள்ளத்திாையிலே அமை யும்படி செய்கிருன்.

பக்தி என்னும் குணத்தின் உருவத்தை அழகான நிலைக்களத்தில் வைத்துப் புலவன் காட்டுகிருன். வெள் ளம் நிறைந்த தாமரை மலர்ந்த வயல்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே ஆனந்த நடனம் செய்யும் எம்பெரு மானைக் கொணர்ந்து கிறுத்தி, ஒரு மெல்லியலாளக் கொணர்ந்து அப்பிானுடைய பூத்தாமர்ைத் திருவடிகளைக் தொழவைத்து நாடக பாத்திரங்களேத் தயார் செய்து விடுகிருன்.

உள்ளம் குளிர்ந்த பக்குவத்தில் அங்கே நிகழும் ஆனந்தக் கூத்தை, அந்த மடமங்கையின் உள்ளே நிகழும் பக்திப் பெருக்கை, பேசாத பேச்சாகிய பாவங்களால் புலப்படுத்துகிருன். -

உள்ளம் குளிர, உரோமம் சிலிர்த்துஉரையும் -

தள்ள, விழி நீர்அரும்பத் தன்மறந்தாள்-வெள்ளவயல், தேந்தா மரைமலர்சூழ் தில்லைத் திருநடஞ்செய் -

பூந்தா மரைதொழுத பொன். -

(உரையும் தள்ள பேச்சானது குழற. தன் மறந்தாள். தன்னை ம்றந்து அவசமானள். தேந்தாமரை-தேன் கிறைந்த தாமரை. திரு கட்ஞ செய் பூந்தாமரை-நடனம் செய்கின்ற நடராஜப் பெருமானுடைய தாமரையைப்போன்ற திருவடி. பொன்-லக்ஷ்மியைப் போன்ற பெண்மணி1

பே, 8 . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/122&oldid=610277" இலிருந்து மீள்விக்கப்பட்டது