பக்கம்:பேசாத பேச்சு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. பேசாத பேச்சு

தடுமாறுகிறதே பேச்சுக்கும் அப்பாற் பட்ட உலக த்து நிகழ்ச்சியாகிவிட்ட பிறகு அதை மீட்டும் இந்தச் சம நிலத்திலே பிடித்து இழுத்துக்கொண்டு வா முடியுமா? அவள் உரை தள்ளித் தடுமாறுகிறது. ஊமையாக நிற்கிருள்.

ஆனல் கண் ஒரளவு கருத்தைப் புலப்படுத்துகிறது. உள்ளத்தில் பொங்கி வழியும் ஆனந்தத்தின் சிறு காலே வெளிப்படுத்துகிறது. நீர் துளித்துத் தாரையாக வழிகிறது. பக்தியின் உருவம் இப்போது பரிபூரணமாகப் புலனுகிறது. அடுத்தபடி இந்த உணர்ச்சி முறுகவே, அவள் தன்னே மறந்து அவசமாகிருள். குளிரும் உள்ளம், புளகம் போர்த்த உடம்பு, நீர் சொரியும் கண்-எல்லாம் கடந்த நிலையில் செயலற்ற தனிமோன இன்பத்திலே திளைத்து விடுகிருள். ஆனந்தக் கூத்தன் சங்கிதானப் பெருமைதான்

என்னே !

பக்தி என்ற குணத்தைப் பற்றிப் பேச முடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி அது. அதைப் படம் எழுதிக் காட்ட வல்லார் யார்? புலவன்தான் வல்லவன். இனிப்பைக் கண்ணுலே பார்க்க முடிகிறதா? ஆலுைம் சர்க்கரையில், பகூடிணங்களில், மிட்டாயில் கலந்து கிற்கும் அதற்கு, அந்தப் பண்டங்களேயே உருவமாக வைத்து எண்ணுகிருேம். ஏழைமையின் படம் ஒன்று போடு என்ருல் ஒவியப் புலவன் என்ன செய்கிருன்? கிழிந்த கந்தல், வற்றிய உடல், குழிந்த கண் முதலிய உருவங்களை இணைத்து எழுதிவிடுகிருன். ஏழைமையின் விளைவுகள் எவையோ அவற்றையே அதன் உருவமாக நாம் ஏற்றுக் கொள்கிருேம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/121&oldid=610276" இலிருந்து மீள்விக்கப்பட்டது