பக்கம்:பேசாத பேச்சு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரின் பொருள் ill.

ஒருகால் அவள் துக்கப்படவே . இல்லையோ என்னவோ இருக்கலாம். ஆனல் கண்ணிர் பெருக் கெடுக்கிறதே. அது துக்கத்தின் அடையாளம் அல்லவா? கண்ணீர் துக்கத்தின் அடையாளமாகச் சில சமயங்களில் இருப்பதுண்டு ஆல்ை எல்லா இடங்களிலும் கண்ணிர் துக்கத்தின் விளைவாகவே வருவது அல்ல. ஆனங் தக் கண்ணிரும் உண்டு. ஆனந்த நடராஜ மூர்த்திக்கு முன் குலே நிற்கும் அவள் விழிர்ே ஆனந்த வெள்ளம் புறம் பொசிகின்ற நிலையைக் காட்டுகிறது. அவள் விழிகளில் நீர் அரும்பக் காரணம் துக்கம் அல்ல; பக்தி உணர்ச்சி.

. துக்கத்தில்ை அழுபவர்களுடைய உள்ளம் கொதிக் கும். இந்த மெல்லியலாளது உள்ளம் குளிர்ந்தது. தன் னுடைய நடனத்தால் உலகத்தின் சக்திகளேயெல்லாம் கரை கடவாமல் ஒழுங்கு பிறழாமல் ஆட்டிவைக்கும் அப் பனைக் கண்டவுடன் அவள் உள்ளம் குளிர்ந்தது. பக்தி, உணர்ச்சி உள்ளத்தே எழும்போது உள்ளம் குளிரும். அதன்பின் அந்தக் குளிர்ச்சி வெளியே தெரிந்தது. பக்திக் கும், அதனல் விளங்த உள்ளக் குளிர்ச்சிக்கும் ரூபம் இல்லை. குணத்துக்கு உருவம் இல்லை. அதைப் பேச்சாலும் விளக்க முடியாது. ஆனல் இங்கே பக்தி கண்ணுல்ே கானும் பாவங்களே உண்டாக்குகிறது.

உள்ளம் குளிர்ந்த பெண்மணியின் உடலெல்லாம் குபி. சென்று புளகம் போர்த்தது. ரோமம் சிலிர்த்ததற்கு மூல காரணம் உள்ளத்தே பெய்த பக்தி மழையில்ை விளக்க தண்மை, அப்பொழுது உள்ளத்தில் விளந்த அமுதப். பெருக்காற்றை வாய்வழியாகப் பேச்சாகக் கொட்டிவிட வேண்டுமென்று அவள் நினைக்கிருள். வேகத்தோடு, வாயைத் திறக்கிருள்; நாக்கு எழும்பவில்லையே! பேச்சுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/120&oldid=610275" இலிருந்து மீள்விக்கப்பட்டது