பக்கம்:பேசாத பேச்சு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணின் பொருள்

. கண்ணிலிருந்து நீர் தா ைதாரையாக வழிய அந்தப். பெண்மணி நிற்கிருள். அவளுக்கு என்ன துக்கமோ தெரியவில்லை. அந்த அழுகைக்குக் காரணம் யாதாக இருக்கலாம்? யாரைப் பார்த்து, எதற்காக அழுகிருள்? எதிரில் யார் இருக்கிருர்கள் ? .

- இதென்ன மனிதர் ஒருவருமே இல்லையே. உலக மெல்லாம் அழிந்தொழியும் நேரத்தில் மகாமயானத்தில் எண்டோள் விசி கின்று ஆடும் நடராஜனல்லவா குனித்த புருவத்தோடும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப் போடும் கிற்கிருன்? ஆனந்தத் தாண்டவம் புரியும் அவன் சங்கிதானத்தில் துக்கம் எது? அகிலலோக மாண காலத் திலும் சாவுக்களத்தில் ஆனந்தக்கூத்தைப் புகுத்தும் அவன் ஆனந்தமய ஜோதி அல்லவா? பிச்சை ஏற்பதிலே பேரின்பம் கானும் அவனுடைய உபாசகர்களுக்கும் பிச்சை ஏற்பதே சர்வலோக சாம்ராஜ்யத் தலைமைக்குச் சமானம் ஆகிவிடுகிறதே. அவலட்சணமான பொருள் களெல்லாம், அவனது. சம்பந்தத்தால் உலகம் தொழும் பொருள்கள் ஆகிவிடுகின்றன. மாணத்தைத் தரும் நஞ்சு அமுதமாகிவிடுகிறது.

அப்படியிருக்க, அந்த மெல்லியலாள், இன்ப வடிவம் படைத்த பெருமாட்டி, இன்பப் பிழம்பான நடராஜ மூர்த்தியின் சக்கிதானத்திலே துன்பக் குமுறலோடு நிற்பானேன்? இதில் எதோ புரியாத சிக்கல், விளங்காத ாகசியம் இருக்கத்தான் வேண்டும். . . . .,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/119&oldid=610274" இலிருந்து மீள்விக்கப்பட்டது