பக்கம்:பேசாத பேச்சு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 to பேசாத பேச்சு

காட்ட இடம் வேண்டும். அப்பொழுதுதான் அது கலையாகும். பிறவும்” என்பது இத்தகைய சுதந்தாம் கலைஞனுக்கு உண்டு என்பதைக் காட்ட நிற்கின்றது.

பயந்து போனவனைப்போல நடிப்பவனுக்கு உடம்பு ஒடுங்கி நடுங்கும். கண் கலங்கும். உள்ளமும் கலங்கும். மறைந்து மறைந்து நடப்பான். கையை எதிரே பாதுகாப் பாக நீட்டுவான். பாக்கப் பாக்க விழிப்பான்.

அச்ச அவிநயம் ஆயும் காலே -

ஒடுங்கிய உடம்பும் நடுங்கிய நிலையும்

அலங்கிய கண்ணும் கலங்கிய உளனும் -

கரந்துவர லுடைமையும் கையெதிர் மறுத்தலும்

பரந்த நோக்கமும் இசைபண் பினவே. .

அருவருப்பாகிய பீபத்ள சலத்தை உண்டாக்க மேற் கொள்ள வேண்டிய அபிநயங்கள் கண் இடுங்குதல்; பல்லே வெளிக் காட்டுதல்; முகம் ஒடுங்குதல்; உடம்பு சோர்தல்; பேச்சு நிாம்பாதிருத்தல் முதலியன.

இப்படியே ஒவ்வொரு சுவைக்கும் உரிய அபிநயங் களே நூல்கள் விரித்துரைக்கின்றன.

36 . 球。” #

நாடகங்களில் விலக்குறுப் என்று பதிலுை பகுதிகளைச் செல்வார்கள். -) - யோடு தொடர்புடையனவாக அவை இருக்கும். நாட கத்தின் முக்கியம்ான கருத்து, நாடகத் தலைவரின் வகை, நாடகக் கதையின் தொடர்ந்த போக்கு, சலம், பாவம், அவிநயம், சொல், வண்ணம், வரி, கதை வந்த வழி, ஆகியவை சம்பந்தமான பகுதிகள் அவை. அந்தப் பதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/127&oldid=610282" இலிருந்து மீள்விக்கப்பட்டது