பக்கம்:பேசாத பேச்சு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிநயங்கள் 119

ன்ைகு உறுப்புக்களில் சுவை என்பது ஒன்று. அது மேலே சொன்ன ஒன்பது வகைப்படும். ஒவ்வொரு சுவைக்கும் உரிய அபிநயங்கள் பலவாகும். வார்த்தைகளாக வரும் அபிநயங்களைக் காட்டிலும் பாவமாகப் புலப்படும் அபிநயங்களே ரளத்தை உண்டாக்க முக்கியமானவை. இந்தச் சுவைகளே வெளிப்படுத்தும் பாவங்கள் உடம்பில் தோற்றும்; உடம்பைக் காட்டிலும் முகத்தில் நன்ருகத் தோற்றும், முகத்தைக் காட்டிலும் மிகுதியாகக் கண்ணிலே தோற்றும்; கண்ணினும் அதிகமாகக் கடைக் கண்ணில் தோற்றம். இதைச் சிலப்பதிகாரத்தின் உரையாசிரிய ாாகிய அடியார்க்கு நல்லார் பின்வருமாறு சொல்கிருர்:

அச்சுவைகளில் எண்ணம் வந்தால் தோற்றும் உடம்பில்;

உடம்பின் மிகத் தோற்றும் முகத்து, முகத்தின் மிகத்

தோற்றும் கண்ணில், கண்ணின் மிகத் தோற்றும் . கண்ணின் கடையகத் தென்றவாறு.

கண்களால் அமைந்த அவிநயம் எல்லாச் சுவைகளுக் கும் மிகவும் முக்கியமானது. வீரச் சுவைக்குச் சிவந்த கண்ணும், அச்சச் சுவைக்கு அலங்கிய கண்ணும், அருவ ருப்புக்கு இடுங்கிய கண்ணும், அற்புதத்துக்கு இமைத் தலும் விழித்தலும், காமத்துக்கு அழகு தோற்றும் கடைக் கண்ணும், அவலச் சுவைக்கு நீர் பொழியும் கண்னும், நடுவுநிலைக்கு அமைதியான கண்ணும், உருத்திரத்திற்குச்

சிவந்த கண்ணும் இலக்கணங்களாக வருகின்றன.

அவிநயம் என்ற உறுப்பு ஒன்று தனியாக உள்ளது. தலைமை வகையால் ஒன்பதென்று வகுத்துக்கொண்ட இயல்புகளுக்குப் புறம்பே வேறு பல இயல்புகளைக் குறிக் கும் பாவங்கள் உண்டு. அவற்றை வெளிப்படுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/128&oldid=610283" இலிருந்து மீள்விக்கப்பட்டது