பக்கம்:பேசாத பேச்சு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120) . பேசாத் பேச்சு

அபிநயங்கள்பே அவிநயம் என்ற உறுப்பாக வகுத் தார்கள். அது இருபத்துநான்கு வகைப்படும். - -

சந்தேகம் கொண்டவன், சோம்பேறி, கள் குடித்த வன், உவகையுள்ளவன், பொருமைக்காான், இன்பமுற்ற வன், தெய்வமேறியவன், ஞஞ்ஞையுற்றவன், சம்மகக் குறிப்புடையவன், தாங்குபவன், விழித்தவன், செத்தவன், மழையில் நனைந்தவன், பனியில் அகப்பட்டவன், வெயிலில் வந்தவன், வெட்கப்படுபவன், வருந்துபவன், கண்வலிக் காான், தலைவலிக்காரன், நெருப்புக் காயம் பட்டவன், ஜலதோஷம் பிடித்தவன், வெப்பமுற்றவன், விஷம் குடித்தவன் என்ற இருபத்துநாலு நிலையில் உள்ளவர் களேப்போல நடிப்பதற்கு ஏற்ற அபிநயங்கள் இன்னவை என்று நாடக இலக்கணம் சொல்லுகிறது.

இதோ ஒரு மனிதன் வருகிருன் கையை நொடித்துக் கொண்டே பல கொட்டாவி விடுகிருன். அடிக்கடி சோம்பல் முரிக்கிருன். சிடுகிடுவென்று விழுகிருன். திடீர் திடீரென்று கீழே உட்கார்ந்து மூதேவி பிடித்தவன் மாதிரி கிடக்கிறன். நடக்கிறபோது தள்ளாடி நடக் கிமுன்-இவன்தான் சோம்பேறி. மடி என்பது சோம் பேறிக்குப் பெயர். மடியின் அவிநயத்தை இலக்கணம் கூறுகிறதைப் பாருங்கள். - .

மடியின் அவிநயம் வகுக்குங் காலே

நொடியொடு பலகொட் டாவிIக உடைமையும்

மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்தலும்

காரண மின்றி ஆழ்ந்து மடிந் திருத்தலும்

பிணியு மின்றிச் சோர்ந்த செலவோடு

அணிதரு புலவர்ஆய்ந்தனர் என்ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/129&oldid=610284" இலிருந்து மீள்விக்கப்பட்டது