பக்கம்:பேசாத பேச்சு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிநயங்கள். - 121

இப்படிப் புலவர்கள் ஆராய்ந்து வகைப்படுத்தியிருக் கிருர்களாம். - -

இதோ ஒரு பேர்வழி கையை விஇ வி.இ எறிகிருன். வாயை மடித்துப் பல்லைக் கடிக்கிருன். புருவம் துடிக் கிறது. உடம்பு நடுங்குகிறது. முகம் சிவக்கிறது. தலை நிமிர்ந்து பெருமிதத்தோடு நிற்கிமுன்.- இவன்தான்

தெய்வ ஆவேசம் வந்தவன்.

தெய்வம் உற்முேன் அவிநயம் செப்பின் கைவிட்டு எறிந்த கலக்கம் உடைமையும் மடித்தெயிறு கெளவிய வாய்த்தொழில் உடைமையும் துடித்த புருவமும் துளங்கிய நிலையும் செய்ய முகமும் சேர்ந்த செருக்கும்

எய்தும் என்ப இயல்புணர்ந் தோரே.

உண்மையாகவே ஆவேசம் வந்த இருக்கியைச் சிலப் பதிகாரத்தில் இளங்கோவடிகள் வருணிக்கிருர். கண்ணகி யின் தோழியாகிய தேவந்திகை என்பவள் தெய்வமுற் றெழுந்தாள். அவளுடைய கொத்தாக இருந்த கூந்தல் குலைந்து பின் வீழ்ந்தது. புருவம் துடித்தது. சிவந்த இதழ்களையுடைய வாயை மடித்துப் பல்லே வெளிக் காட்டி ள்ை. வார்த்தைகள் மயங்கிவந்தன. முகம் வெயர்த்தது. கண் சிவந்தது. கையை விட்டெறிந்தாள். காலைத் தாக்கித் தாக்கி வைத்தாள். யாருக்கும் அறிய முடியாத தெளிவும் மயக்கமும் உண்டாயின. நாக்கு உலர்ந்தது. -

வெட்கமுடையவன் போல கடிப்பதற்குரிய அவிநயங் கள் வருமாறு: குனிந்த கலை, மறைந்த செய்கை, வாடிய முகம், வளைந்த உடம்பு, மங்கிய ஒளி, கீழ்ப்பார்வை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/130&oldid=610285" இலிருந்து மீள்விக்கப்பட்டது