பக்கம்:பேசாத பேச்சு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பேசாத பேச்சு

கண்வலி வந்தவன் போல நடிக்க வேண்டுமானுல், கண்ணிர்த் துளியை விரலில் வழித்துத் தெறிக்கவேண்டும்; புருவம் வளைய வேண்டும்; முகம் வாடியிருக்க வேண்டும்; வெறும் வெளியைப் பார்த்தால் கண் கூசவேண்டும்.

இந்த மனிதன் தலையைச் சதா இப்படியும் அப்படி யும் அசைத்துக்கொண்டே இருக்கிருன். குங்கி வளைந்து உட்கார்கிருன், வேர்வை வருகிறது. கட்டை விாலால் நெற்றியை இடுக்கிக்கொண்டிருக்கிருன, கண் ஒடுங்கியிருக் கிறது.-இவன்தான் தலைவலிக்காரன். .

கொஞ்சிய வார்த்தைகள், பல்லேக் கடிப்பது, பஞ்சு போல வாயில் து ைததும்பல், மனிதர்களே மிகவும் இாக்க மாகப் பார்த்தல், ஏதோ வார்த்தை சொல்லுபவனைப் போலத் தோன்றிலுைம் ஒன்றும் சொல்லாமல் இருப்பது. -இவை நஞ்சுண்டவன் அபிநயம்.

இவ்வாறு T6ುಖT அபிநயங்களையும் சொல்விய ಕT-5 இலக்கணக்காரர், சொல்லிய அன்றியும் வருவன உள வெனின், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப' என்று முடிக்கிருர், மேலே சொல்லிய இலக் கணங்களோடல்லாமல் வேறு அபிநயங்கள் உண்டானுல் எந்த எந்த இடங்களில் இணையுமோ, அந்த அந்த இடங் களில் எப்படிச் சேர்த்தால் நன்முக இருக்குமோ அப்படிப் பொருத்துவார்கள் புலவர்கள் என்பது அதன் அர்த்தம். இதுவும், கலைஞன் தன் மனேதர்மத்துக்கு ஏற்றபடி பேசாத பேச்சாகிய அபிநயங்களைப் பொருத்தமாகச் சேர்த்துக்கொள்ளும் சுதந்தாம் உடையவன் என்பதை

விளக்குகிறதல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/131&oldid=610286" இலிருந்து மீள்விக்கப்பட்டது