பக்கம்:பேசாத பேச்சு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்திரைகள்

புத்த பகவான் புத்தர் ஆவதற்கு முன் பல பிறவிகளே எடுத்தாரென்பது பெளத்தர்களுடைய கொள்கை. புத்த பதவிக்கு ஏற்ற தகுதியைப் படிப்படியாகப் பெற்றுவந்த அப் பிறவிகளில் அவரைப் போதிசத்துவர் என்று வழங்குவர். -

ஒரு பிறவியில் போதிசத்துவர் ஒரு பெண்மணியைக் கண்டார். அவள் மணமானவளா, ஆகாதவளா என்று தெரிந்து கொள்ளும் நோக்கம் அவருக்கு உண்டாயிற்று. "நான் இவளே ஹஸ்த முத்திரை வாயிலாக விசாரிப்பேன்’ என்று எண்ணிக் கையை முஷ்டியாகப் பிடித்தார். அவளும் தனக்கு மணமாகவில்லை யென்பதைப் பேசாத பேச்சினுல் குறிப்பித்தாள், கையை விரித்துப் புலப் படுத்தினுள். :

இந்த இரண்டு வகைக் குறிப்பும் உள்ளக் கருத்தை வெளியிட உதவின. கைகளால் குறிப்பாகக் கருத்தைப் புலப்படுத்துவது ஒரு கலை. போதிசத்துவர் முஷ்டி என்ற முத்திரையினுல் கணவன் என்ற பொருள் தோன்றச் செய்தார். - - - - விரல்களை இறுக மூடிப் பிடிக்கும் அந்தக் குறிப்பு, பற்றுக்கோடு என்பதைப் புலப்படுத்தி, பிறகு பற்றுக் கோடாகிய கணவனேக் குறிப்பித்தது. அவளோ இல்லை. யென்பதை அறிவுறுத்திக் கையை விரித்தாள். அது ாகை யென்னும் முத்திாையாக அபிநயக் கலையில் சொல்லப்படும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/132&oldid=610287" இலிருந்து மீள்விக்கப்பட்டது