பக்கம்:பேசாத பேச்சு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்திரைகள் 129

அபிநயக் கலையில் வரும் முத்திரைகளேயன்றி, பூஜா தந்திரங்களிலும் பல முத்திரைகள் உண்டு. ஆகம சாஸ் திரங்களில் அந்த முத்திரைகளேக் காணலாம். பாலி முத விய கீழ்த்திசைத் தீவுகளில் உள்ள மக்கள் இந்தியாவி லிருந்து சென்றவர்களின் பாம்பரையினரென்று ஆராய்ச் சிக்காரர்கள் சொல்கிருர்கள். அத்தீவுகளில் உள்ள சிற்பங். களும் ஒவியங்களும் இதற்கு ஆதாரங்களாவது போல, அங்கே பூசாரிகள் பூஜை செய்யும்போது காட்டும் முத்திரைகள் இந்நாட்டுப் பூஜா முக்கிளைகளை ஒத்திருக் தலும் ஒரு சாட்சியாக கிற்கிறது. - - இவ்வாறு, வாழ்க்கையில் பேசாத பேச்சாகிய குறி யீடுகளால் காட்சிப் பொருளையும் கருத்துப் பொருளையும் மனிதன் முதலில் உணர்த்தலானன் , அதை உணர்ந்த கலைஞர்கள் முத்திரைகளையும் பிற அபிநயங்களையும் வகுத்து அபிநயித்துக் கலையின்பம் விளக்கிரு.ர்கள், பூஜை செய்யும் கந்தி நூல் வல்லாரும் முத்திரைகளே வழிபாட் டுக் கருவிகளில் ஒரு வகையாகக் கொண்டு ஆஜை. செய்கிருர்கள். கலை, வழிபாடு, வாழ்க்கை-எங்கும்.

பேசாத பேச்சுக்கு மதிப்பு இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/138&oldid=610293" இலிருந்து மீள்விக்கப்பட்டது