பக்கம்:பேசாத பேச்சு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - . - பேசாத பேச்சு

தெரியவில்லை. வடமொழியில் பாதருடைய நாட்டிய சாஸ்திரமும், நந்திகேசுவார் இயற்றிய அபிநய தர்ப்பன மும் பிறவும் முத்திரைகளைப் பற்றி விரிவாகச் சொல் கின்றன.

மனித சமுதாயத்தில் உள்ளக் கருத்தைப் புலப்படுத் தவும் தொழிற்படவும் கை உபயோகப்படுகின்றது. அகத்து நிகழ்ச்சியை இயற்கையாகப் புலப்படுத்துவது கண். செயற்கையாகப் புலப்படுத்துவது கை. -

தினந்தோறும் நமது வாழ்வில் கைகள் பல பல குறிப்பைக் காட்டுகின்றன. 'போ போ” என்று சொல் லும்போது கையை ஒருவிதமாக அசைக்கிருேம்; வா வா” என்பதையும் கைகளின் அசைவினல் புலப்படுத்து கிருேம். ஏன், என்ன, ஏது?’ என்ற கேள்விகளைக் கையை ஆட்டிப் பேசாத பேச்சால் தெரியவைக்கிருேம், அடித்துவிடுவேன், நசுக்கிவிடுவேன் என்பதைக் குத்துவது போலப் பாவனை செய்து காட்டுகிருேம். கூடாது. வேண் டாம் என்று வாய் சொல்வதற்கு முன்பே கை அசைந்து சொல்கிறது. விரல்களின் நுனியைக் கூட்டி வேகமாக விடுகிருேம்; வியர்த்தம், வீண் என்பதை வார்த்தைகளைக் காட்டிலும் பலமாக அந்தக் குறிப்பு உணர்த்துகிறது.

இத்தகைய குறிப்புக்களே மனிதன் செய்வதைக் கண்டு க்ண்டு, கலைஞர்கள் முத்திரைகளை வகுத்திருக்கவேண்டும். கண்ணுலே காணத்தக்க பொருளைச் சுட்டும் கைகளும், கருத்தைக் குறிக்கும் கைகளும் வகுப்பதற்கு மனித சமு தாய்ம். பேசாத பேச்சிலே நிகழ்த்தும் அபிநயங்கள்ே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/137&oldid=610292" இலிருந்து மீள்விக்கப்பட்டது