பக்கம்:பேசாத பேச்சு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா இருக்கிற சாமியார் 5

அனுப்பிவிட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை என்ன என்னவோ பேச வந்தாள். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம் செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில் ஒர் அறை அறைந்தார். அது வில் என்று கத்திக்கொண்டு ஒடியது. ஐயோ பாவம்' என்று அவர் மனம் இாங்கியது. குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்யவேண்டும் என்ற ஆவல் பொங்கிவந்தது. அவர்தாம் பேசக்கூடாதே ! இப்படி ஒன்றன்மேல் ஒன்ருக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள் வந்தன. உலகம் முழுவதும் கட்சி கட்டிக்கொண்டு, 'நீ பேசித்தான் ஆகவேண்டும்” என்று வற்புறுத்துவதுபோல அவருக்குத் தோன்றிற்று. காலை இாண்டு மணி நோம் பேசாமல் இருப்பதற்குள் அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார். அவர் மைத்துனன், வீட்டுக்கு எதிரே கின்ற கழுதையின் மேல் ஒரு பெரிய கல்லே வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் காயம் உண்டாகி ரத்தம் ஒழுகியது. தர்ம கர்த்தாவின் ஜீவகாருண்யம் அதைக் கண்டு கொந்தளித்தது. அட பாவி' என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டார். அவர் மெளன விரதம் குலைந்தது. -

அவ்வளவு நேரம் அடக்கிவைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து வெளிப்படுத்திவிட்டது. அப்பொழுது தான் அவர் உண்மையை அறிந்தார். நேரே தேவஸ்தானக் காரியாலயத்துக்குப் போனர். "சும்மா இருக்கிற சாமி யாருக்கு இரண்டு பட்டைச் சாதம் " என்று. திருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/14&oldid=610169" இலிருந்து மீள்விக்கப்பட்டது