பக்கம்:பேசாத பேச்சு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲁 பேசாத பேச்சு

விட்டுக் காணிக்கைகளுடன் அந்தச் சாமியார் எங்கே என்று அவர் காவில் விழ அவரைத் தேடிக்கொண்டு புறப் பட்டு விட்டார். .

இப்படி ஒரு கதை பலருடைய காதில் விழுந்திருக்கும். பேசுவதைவிடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லுவார்கள். - அதிகமாகப் படித்தவன் அதிகமாகப் பேசுவான். என்று பொதுவாக கினேக்கிருேம். கற்பதைவிடக் கற்றதை உணர்வது அருமை, உணர்ந்ததைவிட உணர்ந்ததைச் சொல்லுவது அருமை என்று புலவர்கள் சொல்லியிருக் கிருர்கள். ஆலுைம் அதற்கு மேலே ஒரு படி உண்டு என்றும் தெரிகிறது. விரிந்து பாவின ஞானத்துக்குப் பேச்சு ஒர் அடையாளமாக இருந்தாலும், ஞானத்தின் தலையளவுக்குப் பேசாமைதான் அடையாளமாம். ஞானத் கின் எல்லை மெளனம் என்று கூறுவர்;

-- மோன மென்பது ஞான வரம்பு

என்று ஒளவைப்பாட்டி சொல்லியிருக்கிருள்.

பேசாமல் இருப்பது கஷ்டம் என்று சொல்லும் போது ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது. கல் பேசாமல் இருக்கிறது; மாம் பேசாமல் இருக்கிறது ; பிராணிகள் பேசாமல் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஞான வரம்பில் கிற்கின்றன என்று சொல்லலாமா? பேசத் தெரிந்தவன், பேசும் ஆற்றலே முற்றப்பெற்றவன், பேசாமல் இருப்பது அருமை. பேசத் தெரிந்தவன் பேசப் பழகியதோடு, பேசாமல் இருக்கவும் பழகவேண்டும். பேசும் ஆற்றல் ஒரு கலையானல், பேசும் ஆற்றல் படைத் தவன் பேசாமல் இருத்தல் அதைவிடப் பெரிய கலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/15&oldid=610170" இலிருந்து மீள்விக்கப்பட்டது