பக்கம்:பேசாத பேச்சு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பேசுகிறது - 131

மலையும் மலையருவியும், காடும் காட்டுக் - தியும், வயலும் வயற்சேறும், கடலும் கடற்கரையும் கவிஞைேடு அந்தாங்கமாகப் பேசாமல் பேசுகின்றன. அவனுடன் பேசாத பொருளே இல்லை. ஒரு புலவர் பலா மாத்தைப் பார்த்தார் ; மாமரத்தைக் கண்டார் : பாதிரி மாத்தைக் கண்ணுற்ருர். பலாமாம் தளிர்த்து இலைவிட்டது , திடீ ரென்று கொத்துக் கொத்தாகப் பிஞ்சுகளே விட்டது. கவிஞர் இந்தக் காட்சிகளைக் கண்டார். மாமரம் தளிரீன்ற இலை முதிர்ந்து அரும்பு முகிழ்த்த்து. பூத்துக் குலுங்கியது. பின் காய்த்தது. இந்த நிகழ்ச்சிகளையும் கவிஞர் கண்டார். வேனிற் காலத்தில் தழைத்து வளர்ந்த பாதிரி மாம் கிளே முழுவதும் பூவாகச் சொரிந்தது, பிறகு அந்த மலர்களெல் லாம் உதிர்ந்தன. காய் என்ற ஒன்று வாவில்லை. பாதிரி மரத்தின் மலர்ச்சியும் கவிஞர் கருத்தில் பதிந்தது.

மலாாமல் காய்த்த பலாவும், மலர்ந்து காய்த்த மாவும், மலர்ந்தும் காயாமல் நின்றுவிட்ட பாதிரியும் கவிஞருடன் பேசின. உலகத்திலே எங்கள் ஜாதி மக்களும் இருக்கிருர்கள்” என்றுதான் பேசியிருக்க வேண்டும். அந்தப் பேசாத பேச்சைக் கேளாமல் கேட்ட கவிஞர் உலகத்தாரிடம் பேசுகிற பேச்சினுல் அவை, வெளியிட்ட உண்மைகளைச் சொல்ல எண்ணினர். கவிஞாாதலின் கவியாக வந்தது. "மூன்ரும் பேருக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய காரியத்தை மெளனமாகச் செய்து விளம்பமே யின்றி வாழும் உத்தமர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று நாம் கேளாமலே கவிஞர், பலா மரத்தைப்போல இருப் பார்கள்’ என்ற சொல்கிருர் மாமரத்தின் ரகசியப் பேச்சைக் கேட்டது.கினேவுக்கு வருகிறது. சில பேருக் குச் செய்யப் போகிற காரியத்தைச் சொல்லிக் கொள்வதில் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/140&oldid=610295" இலிருந்து மீள்விக்கப்பட்டது