பக்கம்:பேசாத பேச்சு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - பேசாத பேச்சு

மதியினிடம் இருக்கும் அந்த மறு கவிஞருக்கு ஒன்றைத் தெரிவிக்கிறதாம். எவ்வளவு பெரியவர்களாக இருந்தால் தான் என்ன ? பல பல உயர்குணங்களுக்கு உறைவிடமாக இருந்தாலும் சரி; அவர்களிடம் சிறிதளவு குற்றம் உண்டானல் போதும் ; உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளும்’ என்று அது பேசாமல் பேசுகிறதாம்.

பெரியோருழையும் பிழைசிறிது உண்டாயின் இருநிலத்துள் யாரும் அறிதல்-தெரிவிக்கும் தேக்கும் கடலுலகில் யாவர்க்கும் தெள்ளமுதம் வாக்கும் மதிமேல் மறு.

  • . 苯 架

தத்துவஞானிகள் இப்படித்தான் உலகைப் பார்க். கிரு.ர்கள். மிகப் பழங்காலத்துத் தத்துவ ஞானிகள் உலகத்தைக் கண்டு கண்டு பல அரிய உண்மைகளை உணர்ந்தார்கள். அப்படி உணர்ந்தவை தர்க்கத்திலும் வேதாந்தத்திலும் இன்று நியாயம் என்ற பெயர் . பெற்று நிலவுவதைப் பார்க்கிருேம். |

ஒரு பனமரத்தில் காக்கை ஒன்று உட்கார்ந்தது, முன்பே பழுத்து முதிர்ந்த பனம்பழம், அது உட்கார்க்க பிறகு விழுந்தது. யாரோ பேசிக் கொண்டார்கள். அடே! இந்தக் காக்கைக்கு எத்தனே பலம் அப்பா பனம்பழத்தைப் பறித்துத் தள்ளுகிறதே!” என்று சொல்லி ஆச்சரியப் பட்டார்கள். அருகிலே இருந்த அறிஞர் இந்த நிகழ்ச்சியைக் கண்டார். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத காரியங்கள் : சந்தர்ப்ப விசேஷத்தால் தொடர்புடையன போலக் தோற்றும் என்ற உண்மை அவருடைய உள்ளத்தில் தோற்றியது. காக்கையும் பனம்பழமும் தோற்றுவித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/143&oldid=610298" இலிருந்து மீள்விக்கப்பட்டது