பக்கம்:பேசாத பேச்சு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாமற் சொன்ன துரை 丑瑾

கல்லாலின் நீழற் கதிகாண நால்வர்க்கும் சொல்லாமற் சொன்ன துரை

என்று பாாாட்டுகிரு.ர். மற்ருெருவர்,

கல்லாவின் புடைஅமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த

பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லது மாய் இருந்ததனே இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல்

நினைந்துபவத் தொடக்கை வெல்வாம் என்று அழகாகப் பாடுகிரு.ர்.

(ஆறு அங்கம்-ஆறு சாஸ்திரங்கள். மறைக்கு அப் பாலாய்-வேதத்தாலும் அறிய முடியாமல் அதற்குப் புறம்பாகி. இருந்த தன்னே. பவத் தொடக்கு-பிறப்பாகிய, கட்டு.)

அறிவின் தலை நிலத்திலே எழுந்த ஐயத்தைப் பேசாத பேச்சு விடுவிக்கிறது. அந்தப் பேச்சைப் பேசத் தனி ஆற்றல் வேண்டும். அதைக் காட்டிலும் அதை உணர்ந்து கொள்ளப் பேரறிவு வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/20&oldid=610175" இலிருந்து மீள்விக்கப்பட்டது