பக்கம்:பேசாத பேச்சு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பேசாத பேச்சு

இருக்கும் நிலைக்கு அறிகுறி ஆதலின் மோன முத்திாை என்ற பெயரும் அதற்கு உண்டு. .

சின் முத்திரையின் பொருளே விளக்கும் நூல்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்தால் ஒரளவு அதன் பொருள் யாவருக்கும் தெரியவரும். தெரிந்துவிட்டால் ஈமக்கும் நான்கு முனிவர்கள் பெற்ற கிலே வந்துவிடுமென்று நினைத்துவிடவேண்டாம். .

தகதினமூர்த்தி பேசாத பேச்சிேைல உபதேசித் ததை காம் பேசுகின்ற புத்தகத்தின் மூலமாக அறிந்துவிட எண்ணலாமா? பேசாத பேச்சைப் பேசுபவனும் இங்கில்லை; அந்தப் பேச்சை உணர்ந்துகொள்ளும் பக்குவமும் நமக்கு இல்லை. சனகாதி முனிவருடைய பக்குவம் மிக உன்னத மானது. சின் முத்திரையைக் கண்ட மாக்கிசத்திலே சொல்லாமற் சொன்ன பிரானது சக்தியும், அதைக் கேளாமல் உணர்ந்தாாது பக்குவமும் ஒன்று பட்டு விளக்கத்தை உண்டாக்கின. மின்சாரப் பொத்தானே அமிழ்த்தில்ை விசையும் விளக்கும் இணைந்து ஒளியுண் டாகின்றது. விசையைப் பற்றியும் விளக்கைப் பற்றியும் பொத்தானேப் பற்றியும் விடிய விடியப் புத்தகத்திலே படித்துப் படம் போட்டுப் பார்த்தாலும் ஒளி உண்டாக வழி உண்டா? சின்முத்திரையின் பொருளைப் பேச்சாக்கி எழுத்தாக்கிப் புத்தகமாக்கிப் படிப்பாக்கிக் கற்று, நமக்கு ஞானனந்தம் பிறக்கவில்லை என்று சொல்வதும் அத்தகைய கேலிக்கூத்தாகத்தான் முடியும். .

குருவும் பேசவில்லை; மாளுக்கர்களும் கேட்கவில்லை. ஆலுைம் பேசாத பேச்சில்ை குரு உபதேசம் செய்தார். சிஷ்யர்கள் சந்தேகம் தெளிந்தார்கள். பேசாத பேச்சால் உபதேசம் செய்த பிான ஒருவர், - ... "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/19&oldid=610174" இலிருந்து மீள்விக்கப்பட்டது