பக்கம்:பேசாத பேச்சு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் பேசும் 13.

தம்பியோடும் மிதிலைக்கு வருகிருன். அங் நகரத்துக்குள் புகுந்து சாஜவிதிவழியே செல்லுகையில் கன்னிமாடத்தின் மேல் சீதை கல்லும் புல்லுங் கண்டுருக நிற்கின்ருள்: உலகத்தில் எங்கும் காண்பதற்கரிய பேரழகுடன் சீதை நிற்கையில், ராமன் அம் மாடத்தருகே செல்கிருன். செல் லும்போது அவன் சீதையைப் பார்க்கிருன். விதி வழியே செல்பவர்கள் யாவருமே அவளேப் பார்க்கக்கூடும். ஆல்ை அவன் பார்த்த பார்வை வேறு. அவன் கண் மாத்திரம் பார்க்கவில்லை. அவனது உள்ளம் கண் என்னும் வாய்

வழியே பேசியது.

இந்த நயன பாஷையை எல்லோரும் பேசிவிட முடியாது. பேசுபவருடைய உள்ளம் உணர்ச்சி மயமாக இருக்க வேண்டும். அந்த உணர்ச்சி கண் வழியே மலா வேண்டும். ஒரு கை தட்டினல் இசை உண்டாகுமா o இந்தப் பேச்சை வாங்கிக்கொள்ள ஒருவர் வேண்டும். அவர் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் படைத்திருக்க வேண்டும். ஒரு பாஷையை ஒருவன் பேசில்ை, அதைக் கேட்கிறவனும் அந்தப் பாஷை தெரிந்தவனுக இருந்தால் தான் அவனுக்கு விஷயம் விளங்கும் ; பேசுகிறவனுடைய கருத்து இன்னதென்று உணர்ந்துகொண்டு ஆவன செய்வான். இல்லாவிட்டால் பேசிய பேச்சு வெறும் ஒலியாகிக் காற்ருேடு கலந்து விளுகிவிடும். மனிதர்க. r ளோடு பழகியும் காதாலே கேட்டும் பயிலும் பாஷைக்கே இந்தப் பாஸ்பாப் பக்குவம் வேண்டுமென்ருல் பேசாத பாஷைக்கு இன்னும் உயர்தரமான பக்குவம் வேண்டுமே.

காதலர் இருவர் சக்திக்கையில், துணிவுடைய ஆடவன்தான் காதல் சம்பாஷணையை ஆரம்பிப்பான். சாமன் பேசாத பேச்சினலே தன்னுடைய உள்ளத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/22&oldid=610177" இலிருந்து மீள்விக்கப்பட்டது