பக்கம்:பேசாத பேச்சு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醒生“ பேசாத பேச்சு

வெளிப்படுத்தினன். அதை ஏற்றுத் தெளிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவள் சீதாபிாாட்டி. பேச்சுக்குப் பதில் கொடுக்கும் சக்தி உடையவள். ராமன் பேசாமல் பேசிய நயன பாஷையிலேதான் விடை அளிக்கவேண்டும்; அதற் குக் கண் மட்டும் ஆடினுல் போதாது; இமை சுருங்கினல் போதாது; கருத்து முந்த வேண்டும்; ராமன் பார்த்த பார்வையூடே சென்று உள்ளத்தை உணரும் உணர்ச்சி வேண்டும். அந்த உணர்ச்சி ஒன்றினுல்தான் தக்க விடை எழும். சீதை ராமனுக்கு ஏற்ற விடை கொடுத்தாளாம்.

எண்ணரும் நலத்தினுள் இனேயஸ் நின்றுழி

கண்ணுெடு கண்ணினே கெளவி ஒன்றைஒன்று உண்ணவும், நிலைபெருது, உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினுன், அவளும் நோக்கினுள்.

(நலம் - அழகு. கின்று.ழி - கின்ற சமயத்தில். கண் இணே - இரண்டு கண்கள்.)

பிறரால் எண்ணிப் பார்த்தற்கும் அரிய போழகும் அருங் குணமும் படைத்தவள் ஜானகி. அவளுடைய அழகு முழுவதையும் பார்க்க யாராலும் முடியாது. கண் கூசும். ராமனுடைய அழகும் அத்தகையதே. வாள் கொண்ட கண்ணுர் யாரே வடிவின்ே முடியக் கண்டார் ?

சிதை நின்றபொழுது அவளுடைய பேரழகிலே பிறர் கண் சென்ருல் அப்படியே நின்றுவிடும். ராமனுடைய கண் அவளுடைய திருமேனியை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு அவள் விழிக்கடையிலே சென்று பதிந்தது. பம்பாம் வட்டமிட்டு அங்கும் இங்கும் போய்க் கடைசியில் ஒர் இடத்திலே கின்று தாங்குகிறதே, அதுபோல ராமனுடைய கண்கள் சீதையின் கண்களிலே பதித்தன. அண்ணல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/23&oldid=610178" இலிருந்து மீள்விக்கப்பட்டது