பக்கம்:பேசாத பேச்சு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் பேசும் - 15.

நோக்கினன் , அவனுக்கு விடையளிக்கும் காதலும் குறிப்பும் உள்ள சீதையும் நோக்கினுள்.

வெறும் பார்வையளவிலே இந்த நிகழ்ச்சி நின்றுவிட வில்லை. பார்வையில் கண்ணுகிய பொறி உணர்ச்சி மாத்திரம் இருந்தால், புற அழகைக் காண்பதோடு நின்றிருப்பார்கள். அந்தப் பார்வைதான் மற்றவர் பார்க்கும் பார்வையைப் போல இருக்கவில்லையே கண் என்னும் சாளரத்தின் வழியே உள்ளமல்லவா பார்த்தது? பார்வையென்னும் நயன பாஷையால் உணர்ச்சியல்லவா பேசியது ? கண்களும் கண் களும் சந்தித்தன. உள்ளத்திலே காதல் உடையவர்க ளுடைய கண்கள் சந்திப்பது இரண்டு கடல்கள் சந்திப் பதற்குச் சமானம். ஒருவர் கண்கள் மற்றவர் கண்களே உண்டனவாம் ! கண்களே தெரியவில்லை : கண்களுககு ஊடே உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பேசாத பேச்சிலே நாட்டம் இருக்கையில், இவை கண்கள்; இது ’ என்ற ஞாபகம் இருக்க நியாயம் இல்லையே! ஆகவே அங்கே கண்களே இல்லை. சாளரத்தின் வழியே பார்க்கிறவன் சாளரத்தைப் பார்ப்பான? சாளரத்துக் - குள்ளே நிற்கும் பொருளேப் பார்ப்பான காதல் உலகத்தில் கண்கள் பார்க்க வந்தன அல்ல ; பேச வந்தன. அங்கே பார்வையாகிய பாஷைக்குத் தலைமை இல்லை ; அதன் அர்த்தமாகிய உணர்ச்சிக்கே தலைமை.

பார்வை

ாமனும் சீதையும் பார்த்தார்கள். கண் இணை ஒன்றை ஒன்று கெளவின. அதோடு நிற்கவில்லை ; உண்டன. அப் பொழுதும் கிலே கொள்ளவில்லை ; உணர்வு ஒன்றுபட்டது. ராமனுடைய பார்வையின் பொருளே, பேசாத பேச்சிலே உள்ள அர்த்தத்தை, சீதை உணர்ந்து கொண்டாள்; அவளும் கண்ணுலேஉணர்வை வெளியிட்டாள். இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/24&oldid=610179" இலிருந்து மீள்விக்கப்பட்டது