பக்கம்:பேசாத பேச்சு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் பேசும் | 9

'ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே-பிறப்பு முதலிய பத்தும் ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுப; அங்கனம் எவ்வாற்ருலும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோளுயி னும் கடியப்படா.’

-நச்சிஞர்க்கினியர் உரை. அவன் அவளைப் பார்க்கும்போது முகலில், 'இவள் இந்த உலகத்துப் பெண்தான?’ என்று ஐயுறுவாணும். அவ்வள்வு சிறந்த அழகுடையவளே இந்த உலகத்திலே பார்ப்பது அரிது. பிறகு அவன், 'இவள் மானிட மங்கையே’ என்று தெரிந்துகொள்வான். தனக்காகப் பிறந்து வளர்ந்தவள் என்று உணர்ந்துகொண்ட காதலன் தன் காதலை வெளிப்படுத்த முற்படுகிறன். அவளும் அதை ஏற்றுக்கொண்டு தன் கருத்தைப் புலப்படுத்துகிருள். எப்படி? பேசவில்லை. பேசாமலே அவர்கள் பேசுகிருர்கள். அவர்கள் உள்ளக் கருத்தை ஒன்று படுத்துவதற்குக் கண்கள் பேசுகின்றன. -

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும் என்று தொல்காப்பியர் சொல்கிரு.ர்.

அவர்களுடைய அறிவை உடம்படுத்தற்கு, இரு வருடைய பார்வைகளே ஒன்றுபடுத்திப் பேசும் குறிப்புப் பாஷை ஆகிவிடுகின்றன.

அங்கனம் மக்களுள்ளாள் எனத் துணிந்து நின்ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தல்ைவியைக் கூடக் கருதி உரை நிகழ்த்துங்கால் கூற்று மொழியான் அன்றிக் கண்ணுன் உரை நிகழ்த்தும் என்பதாஉம், அதுகண்டு தலைவியும் அக்கண்ணுலே தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/28&oldid=610183" இலிருந்து மீள்விக்கப்பட்டது