பக்கம்:பேசாத பேச்சு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பேசாத பேச்சு

வேட்கை புலப்படுத்திக் கூறும் என்பது உம் கூறுகின்றது’ என்று கச்சினர்க்கினியர் இந்தச் சூத்திரத்தின் கருத்தை வெளிப்படுத்துகிரு.ர்.

அறிவு என்பது இங்கே ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்ட உணர்ச்சி ஆகும். தெய்வம் கட்டளையிடச் சந்தித்தமையால் ஒருவரை ஒருவர் கண்டு, நம் வாழ்க் கைக்கு இன்றியமையாதவர் இவர் என்று உணர்ந்து கொண்டு, அவ்வாறு உணர்ந்த உணர்வைத் தம்முள்ளே பரிமாறிக்கொள்ள எண்ணுகிருர்கள். அதற்கு வாய்ப் பேச்சுப் போதாது. வாய்ப் பேச்சுக்கு ஒர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து நிற்பது காதல், காதலர் தம் உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பதும் முடியாத காரியம். இவ்வளவு காலம் அவன் உயிர் அவளுக்காகத் தனித்து நின்று, அவள் எங்கே, எங்கே? என்று தேடியது. அவளும் அதே கிலேயில்தான் இருந் தாள். இப்போது சந்தித்தார்கள். 'உன்னேத்தான் நான் தேடுகிறேன்” என்று உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ள முந்துகின்றன.

உலகத்தில் வழங்கும் எந்தப் பாஷைக்கும் அறிவை உடம்படுத்தும் ஆற்றல் இல்லை. காதலர் கண்கள் சந்திக் கின்றன. அவை பேசிக்கொள்கின்றன. அந்தப் பார் வையே அவர்கள் உணர்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் பாஷையாக விளங்குகிறது. அந்தப் பாஷை பேசாத பாஷை, குறிப்புரை, அவ்விருவருக்குமாத்திரம் விளங்குமே பன்றி வேறு யாருக்கும் விளங்காதது. அந்த மோனக் காதலில், கண்ணுேடு கண் சந்தித்துப் பேசும் பாஷைக்குச் சமானமாக வேறு ஒன்றும் இல்லை. லட்சக் கணக்கான மக்களே வசப்படுத்தும் கவர்ச்சியுள்ள பேச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/29&oldid=610184" இலிருந்து மீள்விக்கப்பட்டது