பக்கம்:பேசாத பேச்சு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் பேசும் 21

அந்த உலகத்துக்குப் புறம்பே கிற்கவேண்டியதுதான். கான், நீ என்று வேறு பிரித்துப் பேசும் சம்பாஷணை யின் கிழல்கூட அங்கே வாக்கூடாது வர முடியாது. அங்கே வாய்ச் சொற்களால் கடுகளவுகூடப் பயன் இல்லை. - இதைத்தான் கிருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிரு.ர்.

கண்ணுெடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

பெரும்பாலும் வாய்தான் பேசுமென்று சாமான்ய உலகம் அறிகின்றது. கண்ணும் பேசும் என்பதைக் கவி ஞர் உலகம் தெரிந்துகொண் டிருக்கின்றது. கண்தான் அங்கே பேசும், வாய்ப் பேச்சுக்கு இடமே இல்லை என் பது காதலர் உலகத்து அதுபவம். இந்த விஷயத்தையே தொல்காப்பியர் இலக்கணமாகச் சொன்னர். கம்பர் காவியமாகப் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/30&oldid=610185" இலிருந்து மீள்விக்கப்பட்டது