பக்கம்:பேசாத பேச்சு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமும கனனும

ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் படைத்த முகம் வெவ்வேருக இருக்கிறது. அகாகி காலமாகப் பிாம சிருஷ்டியில் எத்தனே கோடி மக்கள் பிறக்து மடிந்திருக் கின்றனர்! அத்தனே மக்களிலும் ஒருவர் முகம் ஒரு வருக்கு இருப்பதில்லை. முகத்திலே கண்ணும் மூக்கும் வாயும் நெற்றியும் ஒரே மாதிரியாகத்தான் எல்லோருக்கும் அமைந்திருக்கின்றன. அந்த அமைப்பில் பொதுமையாகிய வரையறை ஒன்று இருக்கின்றது. ஆலுைம் முகத்துக்கு முகம் வெவ்வேறு தோற்றத்தைத்தான் பார்க்கிருேம். இது எத்தகைய ஆச்சரியம் முகம் உடம்பில் தலைமை யான அங்கம். அழகினலும் ஞானேந்திரியங்கள் ஐந்தில் கண் காது மூக்கு காக்கு என்னும் நான்கும் பொருந்தி யிருப்பக்குலும் முகத்திற்குப் பெருமை உண்டாகியிருக் கிறது.

இதைக்காட்டிலும் சிறந்தது ஒன்று உண்டு. மனி. தன் உள்ளப் பெருமையால் உயர்ந்தவன். தக்க இன்ன, தகாதன இன்ன என்று சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும். தனியறிவு படைத்தவன் அவன். அவன் உள்ளத்தே கிக ழும் நிகழ்ச்சியாகிய எண்ணம் கண்ணுல் காண இயலாதது. அதன்கண் நிலவும் உணர்ச்சி காட்சிக்குப் புலப்படாதது. எல்லா உணர்ச்சிகளையும் பேச்சாலே வெளிப்படுத்த இய லாது. ஆயினும், உள்ளத்தினூடே நிகழ்வன எல்லா வற்றையும் வெளிப்படுத்தும் கண்ணுடிபோல உதவுகின் தது முகம். அகத்திலே தோற்றும் உணர்ச்சிக்கு உருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/31&oldid=610186" இலிருந்து மீள்விக்கப்பட்டது