பக்கம்:பேசாத பேச்சு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - பேசாத பேச்சு

யத்தை நிறைவேற்றும் நல்ல அமைச்சாைப் பெற்ருல், அந்த அமைச்சர் தன் முகத்தை நன்முகப் பார்க்கும்படி யாக அவர்கள் முகத்தைப் பார்க்கும் அளவிலே சிற்றலே போதும் என்பது இந்தக் குறளின் பொருள்.

'அவ்வெல்லேயைக் கடந்து சொல்லுமாயின், இவர்க் கும் சிறுமை ஆகலின், அது வேண்டா வென்பதாம்’ என்று இந்தக் குறளுக்கு விசேஷ உரை எழுதுகிருர் பரிமே லழகர். புத்திசாலியாகிய மந்திரிக்குத் தன் முகத்தைக் காட்டுவதே போதுமானதாக இருப்ப, அதை விட்டுவிட்டு அரசன் பேசினுல் இரண்டு பேருக்கும் இழிவு உண்டாகி விடுகிறதாம். தன் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தத் தெரியாதவன் என்று அரசனுக்கும், குறிப்பை உணராத ஜடம் என்று அமைச்சனுக்கும் தாழ்வு வரும் அல்லவா? இயற்கையாகச் சில சமயங்களிலும் செயற்கையாகச் சில சமயங்களிலும் பேசாத பேச்சாகிய குறிப்பு நிகழ் கிறது. உள்ளத்திலே கோபம் உண்டானுல் அதை இயற்கையாகவே முகம் உணர்த்துகிறது. ஏதாவது யோசனை இருந்தால் அதை அரசன் ஒரளவு செயற்கை யாக முகக் குறிப்பால் உணர்த்துகிருன். இருவகைக் குறிப்பையும் உணர்ந்து ஒழுகும் திறமை அமைச்சனுக்கு இருக்கவேண்டும். அத்தகைய அமைச்சனே உலகத்துக்கே ஆபாணம் என்றும், தெய்வத்துக்குச் சமானம் ஆனவ னென்றும் திருவள்ளுவர் பாராட்டுகிரு.ர்.

முகத்தைப் பார்த்து உணர்வதிலும் கண்ணேப் பார்த்துக் கருத்தை உணர்வதில் பின்னும் சிறந்த நுண் ணறிவு வேண்டும். அரசன் வாயாலே பேசமாட்டான்; கண்ணுலே பேசுவான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/35&oldid=610190" இலிருந்து மீள்விக்கப்பட்டது