பக்கம்:பேசாத பேச்சு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமும் கண்ணும் 27.

கண்ணிற் கூறி - இருநிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்

-சிதம்பர மும்மணிக் கோவை, 26 என்று ஒரு புலவர் சொல்கிரு.ர்.

அரசன் தன் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற சங்கற்பம் கொள்ளாவிட்டாலும் கண் அதனே வெளிப்படுத்திவிடும். அதை உணரும் ஆற்றல் உடைய அமைச்சரே நுண் அறிவுடையவர் ஆவர். இங்கிதம், வடிவு, தொழில், சொல் முதலிய பல வகைகளால் ஒருவர் தம் கருத்தை உணர்த்தலாம். அவற்றைத் தம் விருப்பத் திற்கு இசைய மாற்றிக்கொள்ளலாம்; கருத்து ஒன்று இருக்க இங்கிதம் முதலியவற்றை வேருகக் காட்டலாம். ஆனல் கண் மாத்திரம் கருத்தோடேதான் செல்லும். ஆகையால் கருத்தை அளப்பதற்குக் கண் சிறந்த அளவு கோலாக நிற்கிறது. அந்த அளவுகோலைக் கொண்டு உள் ளத்தை அளப்பதற்கு மிக நுண்ணிய அறிவு வேண்டும்.

நுண்ணியம் என்பர் அளக்கும் கோல் காணுங்கால் கண் அல்ல தில்லை பிற குறள், 710 என்று குறள் கூறுகிறது. -

‘யாம் நுண்ணறிவுடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்கும் கோலாவது, ஆராயுமிடத்து அவர்கண் அல்லது பிற இல்லை’ என்பது. இதன் பொருள். இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முத லாகப் பிறர் கருத்தை அளக்கும் அளவைகள் பல; அவை யெல்லாம் முன் அறிந்த வழி அவரால் மறைக்கப்படும்’ நோக்கம் மனத்தோடு கலத்தல்ால் ஆண்டு மறைக்கப் படாது, என்பதுபற்றி அதனையே பிரித்துக் கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/36&oldid=610191" இலிருந்து மீள்விக்கப்பட்டது