பக்கம்:பேசாத பேச்சு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பேசாத பேச்சு

தாம்.உறு காமத் தன்மை

தாங்களே உரைப்ப தென்ப

தாமெனல் ஆவ தன்ருல்

அருங்குல மகளிர்க் கம்மா !

என்று சூர்ப்பனகை சொல்வதாகக் கம்பர் அமைக்கிரு.ர். ாாகூஸியாகிய அவள் தன் காமத்தைப் புலப்படுத்தின லும், அங்கனம் வெளிப்படுத்தல் நாகரிகம் அன்று என்

பதை அவளும் தெரிந்துகொண்டிருக்கிருள்.

பெண்மையிலும் பெண்மையாகிய இந்தத் தன்மையை வள்ளுவர் அழகாகச் சொல்கிரு.ர்.

பெண்ணினும் பெண்மை உடைத்தென்ப, கண்ணில்ை

காமநோய் சொல்லி இரவு. (பெண்ணில்ை-பெண்மைக்குள்ளே. இரவு-இரத்தல்.1.

வாயாலே தம் காதலைச் சொல்லாமல் கண்ணினுலே சொல்லி யாசிக்கும் இயல்பு, பெண்மைக்குள்ளே பெண்மை எங்கே இருக்கிறதோ அங்கே காணப்படுமாம். காதல் பிச்சையை யாசிக்கும் நாகரிக யாசகர்களுக்குக் கையும் வாயும் பயன்படுவதில்லை. கண்களே பேசாத பேச்சால் இாக்கின்றன.

அதை உணர்ந்து விடை கூறுவார் பின்னும் அதிக ஈயமுடைய நாகரிகாாக இருக்தல் வேண்டும். கண்ணுலே குறிப்பை உணர்த்தும் அரசனுக்கு அந்தக் குறிப்பை உண ரும் அறிவு படைத்த அமைச்சன் வேண்டும். அவ் விருவ ரும் அரசியலை நன்கு நடத்துவார்கள். அப்படியே கண் ணுலே காதல் உணர்த்தும் காதலிக்கு அதனே உணரும் காதலன் வேண்டும். அவர் இருவரே இன்ப இயலுக்கு உரியவர்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/41&oldid=610196" இலிருந்து மீள்விக்கப்பட்டது