பக்கம்:பேசாத பேச்சு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமும் கண்ணும் 31 அவன் உணர வழியில்லை என்று எண்ணிச் சொன்ன வார்த்தை இது. பேசும் பேச்சைக் கேளாவிட்டாலும், பேசாத பேச்சை உணரும் அறிவுடையவன் அவன். ஆகவே, அவள் அச்சத்தை உணர்ந்துகொண்ட முறையைச் சொல்கிருன்.

"நீ உன் கருத்தை வெளியிட விரும்பவில்லை. அடக் கப் பார்த்தாய். ஆலுைம் என் செய்வது ! நீ அடக்க அடக்க உன்னேயும் மீறிக்கொண்டு சொல்லிவிட்டாய். உன் வாய் சொல்லவில்லையே அன்றி உன் கருத்தைக் காட்டும் கண்கள் சொல்லிவிட்டன” என்கிருன்.

கரப்பினும் கையிகந்து ஒல்லாதின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. (நீ சொல்லாமல் மறைத்தாலும் உன்ைேடு உடன் படாமல் கின் செயலேயும் கடந்து உன் மையுண்ட கண்கள் எனக்குச் சொல்லக்கூடிய காரியம் ஒன்று இருக்கிறது.)

梁 来源 墊 மகளிர் தம் காம நோயைக் கண்ணுலே சொல்லுவார் களாம். அவர் தம் கருத்தை வெளிப்படையாகப் புலப் படுத்துவதில்லை நாணம் அவ்வாறு செய்ய இடங் கொடாது. உத்தம மகளிருடைய உள்ளக் கருத்துக்கள் மலரில் மென்மை போலவும், தென்றலில் தண்மை போல வும் உற்றறிவாருக்குப் புலப்படும். -

வெளிப்படையாகத் தம் கருத்தைப் புலப்படுத்தல் ஆண்மைக் குணம்; குறிப்பில்ை வெளியாக்குதல் பெண் மைக் குணம். காதல் உணர்ச்சியைக் கண்ணுற் புலப்படுத் துவது பெண்தன்மைக்குள்ளே சிறந்த பெண் தன்மை, பேசாத பேச்சிேைல அதனே உணர்த்தும் நாகரிகம் பண்

பட்ட உள்ளத்தை உடையாரிடந்தான் காணப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/40&oldid=610195" இலிருந்து மீள்விக்கப்பட்டது