பக்கம்:பேசாத பேச்சு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பேசாத பேச்சு

செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற்

றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் அருள் என லாகும்

பணிமொழிக்கே. -

-திருக்கோவையார், 18. (சிறப்பு - தாய் தந்தையர் செய்யும் உபசார வகை. பயில்கின்ற - பழகுகின்றன. செயிர் - குற்றம். பணி மொழி - மெல்லிய வார்த்தைகளைப் பேசுபவள்.)

恐 ナー

நாயகன் சில காலம் வேறு ஊருக்குப் போய்ப் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்து தன் நாயகியுடன் இன்புற்று வாழ்கிருன். முன்னலே பிரிந்தபொழுது என்றைக்கும் இல்லாதபடி அதிக அன்பைக் காட்டின்ை; அதிகமாகக் கொஞ்சினன். இப்போது அவன் அதிகமான அன்பு பாராட்டும்போதெல்லாம் அவளுக்குப் பழைய ஞாபகம் வருகிறது. மறுபடியும் பிரிந்து போவதற்குரிய அறி குறியோ? என்று அஞ்சுகிருள். -

அவள் அச்சத்தை நாயகன் உணர்ந்துகொள்கிருன். ‘பைத்தியமே, கான் பிரியப் போகிறதில்லை. வேண்டிய அளவுக்கு நான் சம்பாகித்துக்கொண்டு வந்துவிட்டேன். இனி நான் உன்னைப் பிரியவேண்டுவதில்லை” என்று சொல்லுகிருன். அவள் இதுகேட்டு நாணம் அடைகிருள். 'நம் கருத்தை இவர் எப்படி அறிந்துகொண்டார் ? நாம் சொல்லாமல் இருந்தும் இவர் அறிய வகை யாது?’ என்று நினைக்கிருள்; நான் அப்படிப் பயப்படவில்லையே!” என்று தன் குயில்மொழியாலே கூறுகிருள். ‘. . . . அவள் பொய் சொல்லுகிருள். தன் அச்சத்தை வெளிப்படுத்தாமல் மறைத்தவள் ஆகையால், அதனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/39&oldid=610194" இலிருந்து மீள்விக்கப்பட்டது