பக்கம்:பேசாத பேச்சு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமும் கண்ணும் 29、

டிருந்த திரிபுரத்தைச் சங்காரம் செய்தவன் சிவபிரான். அவன் தில்லைச் சிற்றம்பலத்தே தாண்டவம் புரிந்தருள் கிருன்; அந்தக் கூத்தனுக்கு ஆட்பட்டவன் இந்தக் காக லன். தனக்கு இன்பம் அளித்த காதலியை அந்தக் கூத் தப்பிாானுடைய திருவருளே என்று எண்ணுகிருன். அவளுடைய மெல்லிய மொழிகளைக் கேட்டுக் கேட்டு: அவன் உள்ளம் குளிர்கிருன். - .

விண்வாய்ச்

செயிர்ஒன்று முப்புரம் செற்றவன்

தில்லைச்சிற் றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் அருள்ளன

லாகும் பணிமொழி

என்று அவளைப் பாராட்டுகிருன்.

மெத்தென்ற மொழியை உடையவளாகிய காதலி யானுலும் இப்போது அந்த மொழியை அவன் கேட்க வில்லை. வாய் பேசவில்லை. அவளுடைய கண்கள் பேசு கின்றன. அவை அவள் காதளவும் நீண்டன. வேற். படையைப்போலக் கூர்மையானவை. அவை தோழியி னிடத்தே சென்று உலவுகின்றன. அப்படி உலவும்போது அவன் அதன் குறிப்பை உணர்ந்துகொள்கிருன். இவ. ளுக்கு என்னெடு உயிர் ஒன்று, உளமும் ஒன்று, ஒன்றே சிறப்பு என்ன, சென்று பயில்கின்ற” என்பதை உணர்ந்து களி கூர்கிருன். இந்தக் களிப்பிலே வருகிறது பாட்டு:

உயிர்ஒன் றுளமும்ஒன் முென்றே சிறப்பிவட்கு

. . என்ளுெடென்னப் பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக்

கண்கள், விண்வாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/38&oldid=610193" இலிருந்து மீள்விக்கப்பட்டது