பக்கம்:பேசாத பேச்சு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம்ாய்ண்த்தில் . - 35 தையும் சொன்ஞ்ன். சென்ற காரியத்தை நிறைவேற்றிய பகுதி அவ்வளவையும் ஒன்றுவிடாமல் சொன்னன். ஆனல் சொல்லாமல் விட்ட பகுதியும் ஒன்று இருந்தது. அர்க்கர்களைக் குலைத்து இலங்கைய்ை எரியூட்டிய தன் விாச் செயலே மாத்திரம் அவன் கூறவில்லை.

பெரியவர்கள் தங்கள் பெருமையைத் தாங்களே

சொல்லிக்கொள்ள மாட்டார்கள். நம் பெருமையை உணர்பவர்கள் இல்லையே! ஒருவருக்கும் தெரியாமல் போய் விட்டால் என் செய்வது ' என்ற கவலையை உடைய வர்களே தங்கள் சிறப்பைத் தாங்களே சொல்லிக்கொள் வார்கள். அவர்களே தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள் கிருர்களே , நாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை’ என்று மற்றவர்கள் நினைத்துச் சும்மா இருக்கும்படியாக அவர்கள் செய்துவிடுகிருர்கள். போரில் நீண்ட வாள் அாக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி மீண்டதும், விளம்பான்; தான் தன் வெற்றியை உரைப்ப வெள்கி’. . என்று கம்பர் சொல்கிருர் தன் வெற்றிச் செயலைக் கன் வாயினலே சொல்வதற்கு அதுமனுக்கு நாணம் உண்டா யிற்ரும். பிறர் தம்மைப் புகழ்ந்தாலே சான்ருேர் நாணு வாாம். அப்படி இருக்கத் தம் புகழைத் தாமே சொல்லும்

இயல்பை அவரிடம் காண முடியுமா ?

சொல்லின் செல்வன் தன் வெற்றிச் செயலைச் சொல்லாவிட்டாலும் அவனுடைய நண்பர்கள் அறிந்து கொண்டார்கள். அதுமனேடு பழகும் அவர்களும் சிறந்த அறிவு படைத்தவர்களே. சொல்லாமலே குறிப்பில்ை. செய்திகளை உணரும் ஆற்றல் அவர்களிடம் இருந்தி: ஆகவே அவர்கள், அறமன் எதை உரைக்கவெள்கினுகுே அதனை உணர்ந்துகொண்டனர். எப்படி ?,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/44&oldid=610199" இலிருந்து மீள்விக்கப்பட்டது