பக்கம்:பேசாத பேச்சு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமாயணத்தில் . 39

ன்ை. ஏந்தல் - ராமபிரான். மொய் - வலிமை. முளரி தாமரை.)

குறிப்பை உணரும் பெருமான் ராமன். அருமன் செயலைக் கண்டான். அந்தப் பேசாத பேச்சின் பொருளே. உணர்ந்துகொண்டான். இவன் தென்திசை நோக்கித் தொழுவதல்ை சீதை உயிருடன் இருக்கிருளென்று தெரி கிறது. இவன் அவளைப் பார்த்திருக்கிருன். அவள் இவ ல்ை தொழத்தக்க கற்புடையவளாக விளங்குகிருள்” என்று அவன் தேர்ந்தான். உடனே அவனுக்கு உவகை மிகுதியாயிற்று. தோள்கள் பூரித்தன. கண்ணில் நீர் துளித்தது. பெருமூச்சு விட்டான். சீதையின் காதல் நினைவிலே ஆழ்ந்தான். .

திண்திறல் அவன்செயல் தெரிய நோக்கினன் வண்திறல் ஒதியும் வலியள். மற்றிவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்றெனக் கொண்டனன். குறிப்பினுல் உணரும் கொள்கையான். (திண்ணிய திறலையுடைய அவன் அநுமன். வண் திறல்ஒதி - மிக்க வலிமையையும் அழகிய கூந்தலையும் உடைய சீதை.) . . . . . .

போய் வந்த செய்கியை இவ்வாறு தெரிவித்து விட் டாலும் மற்றவர்கள் தெளிவாக உணரவேண்டும் அல்லவா? - அதன் பொருட்டும், ாமனுடைய உவகை மிகும் பொருட்

டும் தன் வியப்பை வெளிப்படுத்தும் பொருட்டும் வார்த் r தைகளாலும் செய்தியைச் சொல்லப் புகுந்தான் அநுமன். - 'கண்டனன் கற்பினுக்கு ☞ສາກົລມ? கண்களால் o

என்று தொடங்குகின்றன். சீதையினுடைய கண்களைக் கொண்டு அநுமன் அவளைத் தெளிந்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/48&oldid=610203" இலிருந்து மீள்விக்கப்பட்டது