பக்கம்:பேசாத பேச்சு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

இலக்கிய சம்பந்தமான கட்டுரைகள் எழுத வேண்டும்; அவற்றைத் தொடர்ச்சியாக எழுத வேண்டும். தொடர்ச்சி இருந்தாலும் எந்தக் கட்டு ரையையும் தனியே படித்தால் அந்த அளவில் அது விளங்கவேண்டும் என்ற யோசனை ஒருநாள் தோன்றியது. அப்படி எதைப்பற்றி எழுதுவது? சிறிது மூளையைக் குடைந்துகொண்டேன். கடைசி யில் பேசாத பேச்சு” என்று தலைப்பிட்டு எழுதி விட்டேன். முதலில் இரண்டு பிரிவுகள்-சும்மா இருக்கிற சாமியார், சொல்லாமல் சொன்ன துரை என்ற இரண்டும் கலைமக'ளில் வெளிவந்தன. தொடர்ந்து பேசாத பேச்சை நிர்வகிக்க வேண் டுமே சோம்பேறித்தனம் என்னை ஆட்கொண் டிருந்தால் பேசாத பேச்சு அந்த இரண்டோடு நின்றுபோயிருக்கும். ஆனல் சிந்தனை கிளர்ந்து எழுந்தது. ஏதோ அற்புதமான வாசல் ஒன்று திறந்து பல பல காட்சிகளைக் காண்பது போல இருந்தது. இலக்கண இலக்கியங்களில் பேசாத பேச்சின் கோலங்களையெல்லாம் நினைத்துப் பார்த் தேன்; நூல்களை இந்த நோக்கத்தோடு படித்துப் பார்த்தேன். நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/5&oldid=610160" இலிருந்து மீள்விக்கப்பட்டது