பக்கம்:பேசாத பேச்சு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jv

எழுதிக் குவித்து விடலாம் என்று தைரியம் உண் டாயிற்று. தொல்காப்பிய இலக்கணமும் திருக்குற ளும் கம்பராமாயணமும் வில்லிபாரதமும் பேசாத பேச்சுக்குரிய காட்சிகளை உதவின. பெருங்கதை யில் பேசாத பேச்சைக் கண்டேன்; தனிப்பாடல் திரட்டில் பார்த்தேன்; விக்கிரமாதித்தன் கதைகூட எனக்குத் துணையாக வந்தது. கம்பராமாயணத்தில் அதிக நேரம் நின்று நிலைத்து ஊன்றி உணர்ந்து முனிவரையும் அரக்கரையும் தம்பியரையும் பார்த்தேன்; என்ன ஆச்சரியம் ! எல்லோரும் பே சா ம ல் பேசினர்கள்.

இதோடு நிற்கவில்லை. கொஞ்சம் கலை உலகத் திலும் புகுந்து பார்த்தேன். ரஸம், அபிநயம், முத் திரை என்று நடனக்கலையில் உள்ள பகுதிகளை யெல்லாம் ஒரு மூலையிலிருந்து சிறிது பார்த்தேன். அடேயப்பா ! இந்த உலகம் முழுவதுமே பேசாத பேச்சிலேதான் நடக்கிறது. அதை விரிவாகக் காட்ட எனக்கு ஆற்றல் எங்கே? நேரம் எங்கே? எழுதினுல்தான் அன்பர்கள் கடைசி வரையில் பொறுமையாகப் படிப்பார்களா? ஆகவே, ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என்ற பழமொழியை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு கட்டுரை எழுதினேன். - .

இந்தக் கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்த போது என்னுடைய நண்பர் ஒருவர் இலங்கையி லிருந்து பாராட்டி எழுதினர். "நல்ல தலைப்பை எடுத்துக் கொண்டீர்கள். இன்னும் எவ்வளவு வேண்டுமானலும் எழுதிக்கொண்டே போகலாமே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/6&oldid=610161" இலிருந்து மீள்விக்கப்பட்டது