பக்கம்:பேசாத பேச்சு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- V

என்று எழுதியிருந்தார். அவர் சலிப்பினலே அப்படி எழுதவில்லை. இந்தத் தலைவாசல் எவ்வளவு விரிந்த் பூமிக்கெல்லாம் நம்மை இழுத்துச் செல்லும் என் பதை எண்ணி வியந்துதான் அப்படி எழுதினர். நல்ல கட்டுரையாக இருந்தால் சிந்தனையைக் கிளரச் செய்ய வேண்டுமென்று சொல்வார்கள். இந்தக் கட்டுரைகளைக் கண்ட அன்பர் சிந்தனை கிளர்ந்த தோடு, மேலே மேலே பல பல எழுதலாம் என்ற கற்பனையும் முளைத்தது. இது கட்டுரையின் வெற்றி யல்லவா?

இன்னும் எத்தனையோ எழுதலாம். நான் காட்டியிருக்கும் நூல்களில் வரும் பேசாத பேச்சுக் காட்சிகளையெல்லாம் எடுத்துக் காட்டவில்லை. ஆனால், இதில் உள்ள கட்டுரைகளைப் படிக்கிறவர்கள், "இன்னும் இவையெல்லாம் பேசாத பேச்சுத்தானே ? எழுதலாமே?” என்று நிச்சயமாக நினைப்பார்கள். எழுதாத அந்தக் கட்டுரைகள் அவர்கள் உள்ளத்தில் தோன்றும்படி செய்வதே இந்தப் புத்தகம் எழுதியதன் பயன் என்று கருதுகிறேன்.

பேசுகிற பேச்சுக்கு முடிவுண்டு. பேசாத பேச்சுக்கு முடிவு ஏது? உலகம் தோன்றுவதற்கு முன்பே பேசாத பேச்சு எழுந்தது; உலகம் அழிந் தாலும் பேசாத பேச்சு அழியாமல் நிற்கும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கண் பேசுகி றது; முகம் பேசுகிறது; கை பேசுகிறது; மலர் பேசுகி றது; உலகமேதான் பேசாத பேச்சைப் பேசுகிறது’ என்று நினைத்தேன். உலகம் பேசுகிறது' என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/7&oldid=610162" இலிருந்து மீள்விக்கப்பட்டது