பக்கம்:பேசாத பேச்சு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த தந்திரம் 43.

. அப்போது மகத மன்னன் அவர்களேக் கூர்ந்து நோக்கி அவர்கள் தோளில் வில் தழும்பு இருப்பதையும், அவர்கள் தோற்றத்தையும் கண்டு ஐயுற்று, ' உங்களைப் பார்த்தால் அந்தணர் என்று தோன்றவில்லை. உண்மை

யைச் சொல்லுங்கள்; நீங்கள் யார் ?’ என்று கேட்டான்.

" நான் யாதவ குலத் தலைவனுகிய கண்ணன்; இவ் விருவரும் குருகுலத்தாசனுகிய தருமபுத்திரனுக்குத் தம்பி யர் வீமனும் அர்ஜுனனும் உன்னுடைய வளங்களைக் காணும் பொருட்டு வந்தோம். அரசர்கள் இதை அணுகு வது அரிதாதலின் மறையவர் உருப் புனேந்து புகுந்தோம்’ என்ருன் கண்ணன்.

ஜாாசந்தன், அப்படியா என் தோள்கள் பகை வரைப் பெருமல் தினவு கொண்டிருக்கின்றன. அமர் புரிய வாருங்கள் ' என்று ஊக்கத்தோடு கூறி, அப்பால் கண்ணனை நோக்கி, நீ பகைவர்களுக்கு அஞ்சி மதுரையை விட்டுத் துவாரகைக்கு ஒடினவன். உன்னேடு போர் செய்தல் வீாமன்று. அசுரர்களுக்குத் தோற்ருேடும் இந் திான் மகனுகிய அர்ஜுனனே இளையவன். ஆகவே அவளுேடும் போர் புரியமாட்டேன். எனக்கு ஏற்றவன் வீமன்தான். அவைேடு நான் போர் இடுவேன்' என்று. அறைகூவினன். தன் மந்திரிகளே அழைத்துத் தன் மக. லுக்கு முடிசூட்டிவிட்டு வீமனுடன் மல்யுத்தம் புரியத் தொடங்கினன். - - - o அவ்விருவரும் சிங்கமும் சிங்கமும் பொருதாற் போலத் தாக்கினர். காலாலும் கையாலும் தோளாலும் தலையாலும் முட்டி மற்போர் நடத்தினர். இவ்வாறு பதினைந்து நாள் பகலும் இரவும் விடாமல் யுத்தம் செய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/52&oldid=610207" இலிருந்து மீள்விக்கப்பட்டது