பக்கம்:பேசாத பேச்சு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பேசாத பேச்சு

.தார்கள். அகலம் நடுங்க எழுகிரி நடுங்கத் திசையெல்லாம் நடுங்க வானமெல்லாம் நடுங்க இருவரும் போர் செய்து தளர்ச்சியை அடைந்தனர். ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டுமென்ற ஆத்திரம் மிக்குப் போர் செய்த அவ்விரு வரும் தங்கள் கருத்து நிறைவேருமல் களப்புற்றுக் கீழே விழுந்தனர்.

அப்போது வாயுதேவன் தன் மகனுகிய வீமன்மேல் மெல்லென வீசி அவனுக்கு உணர்வும் ஊக்கமும் வாச் செய்தான். உடனே வீமன் எழுந்து தன் பகைவன் கால்களே இரு கைகளாலும் பற்றித் தாக்கி, இரணியனைப் பிளந்த நாசிங்கத்தைப்போலக் கிழித்து வெற்றியாாவாரம் செய்து கின்ருன். -

இரண்டாகப் பிளந்து விசிய ஜாசந்தனுடைய உடலம் மீளவும் பொருந்தி ஒன்ருகியது. ஜாசந்தன் பண்டுபோல் எழுந்து தோள் கொட்டி ஆர்த்தான். விமன் அதுகண்டு வியந்து மறுபடியும் போர் செய்யத் தொடங்கி ன்ை. முன்னேயினும் ஏழு மடங்கு பலம் கொண்டு உதைத்துத் துகைத்தான். ஜாசக்தன் உடல் மீண்டும் இரண்டு பிளவாயிற்று. х

அந்த இரண்டு பிளவுகளும் மறுபடியும் ஒன்றுபட்டுத் தோற்றியது. வீமனும் அர்ஜுனனும் உண்மை உணரா தவர்கள். மாயனே ஜாசந்தன் உடல் மீண்டும் ஒன்முகி விடும் என்பதை உணர்ந்தவன். அவை அங்கனம் சோத வாறு செய்தால்தான் வீமன் வெற்றி அடைவான். இன்னவாறு செய்தால் பிளந்த பிளவுகள் ஒன்றுபடாமல் கிடந்தபடியே கிடக்கும் என்ற உண்மை கண்ணனுக்குத் தெரியும். அதை வீமனுக்கு வெளிப்படையாகக் கூறுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/53&oldid=610208" இலிருந்து மீள்விக்கப்பட்டது