பக்கம்:பேசாத பேச்சு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த கண் 57 தொடர்ந்துவந்து உதயணனச் சூழ்ந்துகொண்டனர். அவைேடு போர் செய்ய ஆரம்பித்தார்கள். உதயணன் வாசவதத்தையைக் காஞ்சனேயோடு இரிட்த்தில் நிறத்தி விட்டு, அம் மறவரை எதிர்த்து நாற்பத்தொன்பது பேர்ை அம்புக்கு இசையாக்கினன். எஞ்சி யிருந்தவர்கள் - யாவரும் போரிடுதலை நிறுத்திவிட்டு அந்தத் தோப்பின் நாற்புறத்திலும் பெரிய தீயை மூட்டிவிட்டு ஒடிப் போனுர்கள்.' м * . .

இடவகன் இப்படிச் சொல்லி வருகையில், உத யணனைச் சூழத் தீ வைத்தார்கள் என்று சொல்லி முடித்தானே இல்லையோ, கேட்டுக்கொண்டிருந்த யூகி திடீரென்று மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். -

உதயணன் எரியிடையே அகப்பட்டான் என்ற செய்தி ஆகியின் உணர்வைப் போக்கியது. அவ் விருவரிடையே அத்தகைய அன்புப் பிணைப்பு இருந்தது. இடவகன், 'உதயணன் உயிருடன் இருக்கின்ருன் என்று முதலில் கூருமல் கதையை அடிமுதல் சொல்லிவந்தது பிழை” என்று நொந்துகொண்டு, யூகிக்குச் சைத்தியேர்ப சாாங்களேச் செய்து தெளிவித்தான். தெளிவித்தவுடன், 'உதயணன் வாசவதத்தையுடன் சுகமாக இருக்கிருன்” என்பதைக் கூறிப் பழங் கதையை விட்ட இடத்திலிருந்து தொடங்கினன். - -

'மீட்டும் உதயணன் வேடர் கூட்டம் வளைந்து கின்றது. அப்போது நாங்கள் படையுடன் செல்லவே, அவர்கள் அஞ்சி ஓடினர். நாங்கள் நம் மன்னனைச் சயந்தி நகருக்கு அழைத்துவந்து வாசவதத்தைக்கும் அவனுக்கும் திருமணம் நிகழ்த்தினேம். இப்பொழுது அவ்விருவரும் இன்ப மயமான உலகத்தில் வாழ்கிருர்கள். சூரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/66&oldid=610221" இலிருந்து மீள்விக்கப்பட்டது