பக்கம்:பேசாத பேச்சு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேசாத பேச்சு

சந்திார் உதயமாவதும் அஸ்தமிக்கிறதும் அவர்களுக்குக் தெரிவதில்லை; தன் நாட்டை ஆருணி கைப்பற்றிக் கொண்டதையும் உதயணன் மறந்தான்; உயிரைப்போன்ற தம்பியரைப் பற்றிய நினைவே இல்லை. இந்திர பதவியைப் பெற்ற ரகுஷன் எப்படி இந்திராணியின் சுகபோகத்துக் காகப் பறந்தானே, அப்படி ஆர்வம் மீதுார வாசவதத்தை யுடன் இன்புற்றிருக்கிருன். அவனேப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பமே கிடைப்பதில்லை. நாங்கள் என்ன செய்வோம்!”

என்ருன். .

இப்படி இடவகன் முடித்ததைக் கேட்ட யூகி புன்னகை பூத்து, பாவம்! எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளான நம் அரசர் பெருமான் கொஞ்ச காலம் இப்படியே இன்பத்தில் ஆழ்ந்து கிடக்கட்டும். அதனுல் குற்றம் ஒன் மம் இல்லை” என்று சொல்லி அயலில் இருந்த யாவருக் கும் ஒவ்வொரு வேலையைச் சொல்லி அனுப்பினன். பிறகு சாங்கியத் தாயைத் தனியே அழைத்து, 'தாயே, உதயணனே இனிமேல் பாதுகாப்பது உம்முடைய கடமையாகும். அவன் இப்போது காமமென்னும் சேற்றுள் ஆழ்ங் திருக்கிருன். அவனேயும் வாசவதத்தையையும் பிரிக்க வேண்டும். அவலே உண்டு நான் இறந்துவிட்டதாக அவ அக்குத் தெரிவிக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவனுக்கு ஊற்றம் உண்டாகும். காம உணர்ச்சி கழல, என் துணையும் இல்லாமையால், இனித் தானே முயல வேண்டும் என்ற உணர்ச்சியைப் பெறுவான். இப்புடிச் செய்த்ாலன்றி அவனை வழிக்குக் கொண்டு வருவது. அரும்ை” என்று. கூறி, மேற்கொண்டு கடக்கவேண்டிய முறைகள் இன்ன இன்ன்வென்ம் தன் நண்பர்களுக்கும்

தெரிவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/67&oldid=610222" இலிருந்து மீள்விக்கப்பட்டது