பக்கம்:பேசாத பேச்சு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த கண் - 59.

பிறகு, அவலே உண்டு விக்கி இறந்து பட்டவனைப் போலக் கிடந்தான். முன்னே தீர்மானம் செய்தபடியே இடவகனும் பிற உயிர் நண்பரும் யூகி இறந்தபோனதற்கு வருந்துபவர்போல வருந்தி அழுது, மெய்ஞானியாகிய இவன் உடலைச் சுடுதல் தகாது. கங்காசியில் ஜல சமாதி செய்துவிடவேண்டும்” என்று சொல்லிப் போக்குக் காட்டி யூகியை மறைத்து வைத்தனர்.

சாங்கியத்தாய் மேலே நிகழ வேண்டியவற்றைச் செய்ய எண்ணி உதயணனைக் காணும் பொருட்டுச் சயந்தி நகரத்துக்குச் சென்ருள். அங்கே உதயணனேக் கண்டு. அவனுல் உபசரிக்கப் பெற்ருள்.

兴 蘇 - 苓

உதயணன் அவளே நோக்கி, உஜ்ஜயினியை விட்டு நீங்கள் வந்திருக்கிறீர்களே என் உயிருக்குயிாகிய யூகி. வாவில்லையா?” என்று கேட்டான்.

யூகிக்கும் உதயணனுக்கும் உள்ள அன்பின் ஆழத்தை அத் தவ முதுமகள் உணர்ந்தவள். யூகி இறந்தான் என் பதை அவனுக்குத் தெரிவிக்கவேண்டும். அதைத் தெரிவித் தால் உதயணன் உடனே மனம் உடைந்து இறந்து பட்டா லும் படலாம். ஆனல் பூகி இறந்தான் என்பதைத் தெரிவிக் தால்தான் மேல்ே காரியங்கள் ஒழுங்காக நடைபெற முடியும். இந்தக் கர்ம சங்கடத்தில் என்ன செய்வது?

உதயணன் கேட்ட கேள்விக்கு அவள் உடனே விடை கூறவில்லை. சிறிது நோம் கழித்து, வோசவதத்தையுடன் புறப்பட்ட அன்று இரவு பூகி அங்கே எதிர்த்து வெல்ல வேண்டியவர்களேயெல்லாம் வென்றுவிட்டு என்னேயும் அழைத்துக்கொண்டு வந்தான். ஆணுல் இடையே இரிடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/68&oldid=610223" இலிருந்து மீள்விக்கப்பட்டது