பக்கம்:பேசாத பேச்சு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த கண் 61:

யூகி பேசாத பேச்சினுல் இந்தச் சிக்கலை விடுவிக்க எண்ணி, உதயணனப் போலவே சித்திரம் ஒன்றை எழுதி ன்ை. அதில் நான்கு கண்கள் இருப்பதாக அமைத்து மேலே உள்ள ஒரு கண் அழிந்து மழுங்கியிருக்கும்படி வாைந்தான். அதைச் சாங்கியத்தாயிடம் கொடுத்து,

நீங்கள் வாய் திறந்து பேசவேண்டாம். மதி நிறைந்த மன்னனுக்கு முன் இதனைக் கொண்டு சென்று. காட்டுங்கள்; போதும்’ என்ருன். அவள் அவ்வாறே.

அதனே எடுத்துச் சென்ருள்.

உதயணனும் வாசவதத்தையும் உல்லாசமாக வார்த்தை. யாடிக்கொண்டு ஒரிடத்தில் அமர்ந்திருந்தனர். அங்கே சென்று ஒவியத்தைச் சாங்கியத்தாய் காட்டினள். அதைக் கண்டவுடன் உதயணன் அதன் அழகில் ஈடுபட்டு, மகிழ்ங். தான். உருவமெல்லாம் உலகில் உள்ள மக்களுக்கு ஏற்ற. படி இருக்க, நெற்றியில் மாத்திரம் நான்கு கண்கள் இருந்: தன. அவற்றிலும், மேலே இருந்த கண் மழுங்கியிருந். தது. இது என்ன? மற்றவையெல்லாம் எழில் பொருந்தி விளங்க, இக்கண்கள் மாத்திரம் உலக இயல்புக்கு மாறுபட அமைந்துள்ளனவே?’ என்று சிந்திக்கத் தொடங்கினன். பல கலை விற்பன்னகிைய உதயணனுக்குச் சித்திாக் கலையின் நுட்பம் நன்முகத் தெரியும். உள்ளுற ஒரு கருத்தை அமைத்து எழுதும் பாவ சித்திரங்களின் உயர் வையும் அவன் அறிவான். ஆகவே அந்த ஒவியம் எதையோ பேசாத பேச்சால் சொல்லுகிறது என்று தெளிந்தான்.

அதன் பொருள் யாது? - அவன் அறிவு படர்ந்தது.

- உறுப்புக்களைப் போன்றவர்கள் உறவினர்கள்; உடம் போடு ஒன்றுபடாத உறுப்புக்கள். சுற்றத்தார் கால்களுக் குச் சமானம் ஆனவர்கள் மனைவி தோளுக்கு ஒப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/70&oldid=610225" இலிருந்து மீள்விக்கப்பட்டது