பக்கம்:பேசாத பேச்சு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£32 பேசாத பேச்சு

வள்; மக்கள் பல்லுக்கு இணைப்ானவர்கள்; தோழர் கண்ணேப் போன்றவர்கள் ஏவலர் பாதங்களைப் போன்ற வர்கள். இந்த முறையில் கண்களாகச் சொல்லப் பெறுபவர்கள் தோழர்கள். . . . . . - உதயணன் இந்தக் குறிப்பைச் சிந்தனே செய்தான். 'இந்த உருவம் நம்மைப்போல இருக்கிறது. நம்முடைய தோழர் நால்வரும் நான்கு கண்கள். மேலே உள்ள கண் அழிந்திருக்கிறதே நம் தோழர்களுக்குள் மேலான யூகிக்கு." இப்படி ஒடின உள்ளம் திடீரென நின்றது. அதற்குமேல் அவனுல் -கினேக்க முடியவில்லை. கண் சோர்ந்து மெய்ம்மறந்து வீழ்த்தான். அவன் மயங்கி விழுந்தது. கண்டு அருகில் இருந்த வாசவதத்தையும் அவன் மார்பில் விழுந்து மயக்கம் அடைந்தாள்.

"அப்பால் ஏவலாளரும் பிறரும் சைக்கியோபசாரம் செய்து அவ்விருவருக்கும் உணர்வு வரச் செய்தனர். பேசாத பேச்சினுல் புலப்படுத்தியதற்கே இத்துணைத் துயரம் அடைந்தானெனின் சட்டென்று வாயாற் கூறினல் உயிரே போயிருக்கும் போலும் என்னே அன்பின் ஆற்றல்' என்று சாங்கியத்தாய் வியந்தாள்.

. பிறகு மெல்ல மெல்ல, அவல் தொண்டையில் சிக்கிய தால் பூகி இறந்தான் என்ற செய்தியை உதயணன் உணர்த் தான். தொடர்ந்து வாசவதத்தையைப் பிரியவும்.நேர்ந்தது. பூகி இப்படிப் பல சாமர்த்தியச் செயல்களைச் செய்தும் செய்வித்தும் இறுதியில் உதயணனே மீட்டும் வத்தவ தேசத்துக்கு அரசனுக்கி இன்புறச் செய்தான்.

சித்திரத்தால கருத்தைப் புலப்படுத்திய இந்த நிகழ்ச்சியைப் பெருங்கதை என்னும் தமிழ்க் கர்விப்ம் மிக அழகாக எடுத்துாைக்கின்றது. i -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/71&oldid=610226" இலிருந்து மீள்விக்கப்பட்டது